»   »  கண்டதும் தொபுக்கடின்னு காதலில் விழுவதில் நம்பிக்கை இல்லை: அனுஷ்கா

கண்டதும் தொபுக்கடின்னு காதலில் விழுவதில் நம்பிக்கை இல்லை: அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: முதல் பார்வையிலேயே காதல் என்பதில் தனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை என நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் அவரது காதலரும், கிரிக்கெட் வீரருமான விராட் கோஹ்லிக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாம். தனது தனிப்பட்ட சுதந்திரத்தில் கோஹ்லி தலையிடுவது அனுஷ்காவுக்கு பிடிக்கவில்லையாம்.

இந்நிலையில் காதல் பற்றி அனுஷ்கா கூறுகையில்,

காதல்

காதல்

நான் ரொம்ப எதார்த்தமானவள். கண்மூடித்தனமாகவோ அல்லது முதல் பார்வையிலோ நான் காதலில் விழ மாட்டேன். எனக்கு இது எல்லாம் எளிதில் புரியாது.

புரியாது

புரியாது

யாராவது என்னை காதலித்தால் அதை எனக்கு புரிந்துகொள்ள தெரியாது. அவர்கள் தான் அதை வாயை திறந்து கூற வேண்டும் இல்லை கார்டில் எழுதிக் காட்ட வேண்டும்.

கடலை

கடலை

எனக்கு கடலை போடுவது புரியாது. அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஆண்களை நண்பர்களாக பார்ப்பதால் யாராவது காதலித்தால் அதை கூற வேண்டும்.

கிரஷ்

கிரஷ்

எனக்கு யார் மீதும் எளிதில் ஈர்ப்பு வராது. என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேச மாட்டேன். அதே போன்று அடுத்தவர்களின் காதலுக்கு அறிவுரை வழங்க மாட்டேன். உடல்நலம் குறித்து என் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு மட்டுமே அறிவுரை வழங்குவேன்.

English summary
Bollywood actress Anushka Sharma said that she doesn't believe in love at first sight.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos