»   »  நான் திமிர் பிடித்தவளா?.. கேட்கிறார் நித்யா மேனன்

நான் திமிர் பிடித்தவளா?.. கேட்கிறார் நித்யா மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் படப்பிடிப்புக்கு பெற்றோர், மேனேஜர் இன்றி தனியாக தான் வருவேன். யாராவது என்னிடம் ஏடாகூடமாக நடந்தால் திட்டிவிடுவேன். அதனால் நான் திமிர்பிடித்தவள் என்கிறார்கள் என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் நித்யா மேனன். மணிரத்னத்தின் இயக்கத்தில் அவர் நடித்த ஓ காதல் கண்மணி படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது அவர் சூர்யாவுடன் சேர்ந்து 24 படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் பற்றி கூறுகையில்,

பிடிக்கவில்லை

பிடிக்கவில்லை

நடிகைகளை பிரபலம் என்பது பிடிக்கவில்லை. எங்களால் வெளியே தனியாக செல்ல முடியவில்லை. சென்றால் கூட்டம் கூடிவிடுகிறது. எங்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுக்கிறார்கள்.

நடிகை

நடிகை

நடிகை என்பதால் எங்களிடம் கேட்காமலேயே எங்களை புகைப்படம் எடுக்கிறார்கள். வேறு யாரையாவது இப்படி அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்தால் சும்மா விடுவார்களா?

நெருக்கம்

நெருக்கம்

நாங்கள் நெருக்கமாக பழக அனுமதிக்காவிட்டால் இந்த நடிகை திமிர்பிடித்தவர் என்கிறார்கள். எனக்கு திமிர் எல்லாம் கிடையாது.

திமிர்

திமிர்

நான் படப்பிடிப்புக்கு பெற்றோர், மேனேஜர் இன்றி தனியாக தான் வருவேன். யாராவது என்னிடம் ஏடாகூடமாக நடந்தால் திட்டிவிடுவேன். அதனால் நான் திமிர்பிடித்தவள் என்கிறார்கள்.

குள்ளம்

குள்ளம்

நான் குண்டாக குள்ளமாக இருக்கிறேன் என்கிறார்கள். நடிப்பிற்காக சாப்பாட்டை தியாகம் செய்வது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். குள்ளமாக, குண்டாக இருப்பது கடவுளின் செயல். அதை விமர்சிக்கக் கூடாது.

காதல்

காதல்

நான் 18 வயதில் காதலித்தேன். ஆனால் அவருடன் இருந்தால் என் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்று தோன்றியதும் பிரிந்துவிட்டேன்.

திருமணம்

திருமணம்

இவரை மணந்தால் தற்போதை விட கூடுதலாக மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று யாரைப் பார்த்து தோன்றுகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன். அப்படிப்பட்டவரை இதுவரை சந்திக்கவில்லை. பொருத்தமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்வதைவிட தனியாக இருப்பதே மேல் என்றார் நித்யா.

English summary
Nithya Menon said since she has to come alone for shootings, she has to take care of herself. So, people think that she has head weight.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil