»   »  எனக்கு நடிகர் ராணாவை 18 வயதில் இருந்தே தெரியும், ஆனால்...: த்ரிஷா

எனக்கு நடிகர் ராணாவை 18 வயதில் இருந்தே தெரியும், ஆனால்...: த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராணாவை தனக்கு 18 வயதில் இருந்தே தெரியும் என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பலகாலமாக பேசப்பட்டது. பொது இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றினர். விருது விழாக்களிலும் ஜோடியாகவே வலம் வந்தனர்.

காதலா என்று கேட்டால் மட்டும் இல்லை என்றனர்.

வருண் மணியன்

வருண் மணியன்

ராணாவுடன் காதல் என்று பேசப்பட்ட நிலையில் த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அது நிச்சயதார்த்தத்தோடு முடிந்தது.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பில் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.

ராணா

ராணா

எனக்கு 18 வயதில் இருந்தே ராணாவை தெரியும். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர். நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். பின்னர் அவருடன் பேசுவதே நின்றுவிட்டது. அவருக்கும் எனக்கும் இடையேயானது பாசம்-வெறுப்பு கலந்த உறவு. நல்ல மனிதர் என்றார் த்ரிஷா.

கொடி

கொடி

தனுஷுடன் சேர்ந்து நடித்த கொடி படம் வெற்றி பெற்றதில் த்ரிஷா மகிழ்ச்சியாக உள்ளார். ராணா ராஜமவுலியின் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.

English summary
Actress Trisha said that she knows Telugu actor Rana since she was 18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil