»   »  நான் கொஞ்சம் லூசு.. காஜல் அகர்வால் களேபரப் பேச்சு!

நான் கொஞ்சம் லூசு.. காஜல் அகர்வால் களேபரப் பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நான் கொஞ்சம் லூசு. ரொம்ப தெளிவாக இருந்தால் சினிமாவில் இருக்க முடியாது என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் கைதி எண் 150 படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தவிர தனுஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் சினிமா பற்றி காஜல் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பெங்களூரு

பெங்களூரு

நான் பல முறை பெங்களூருக்கு வந்துள்ளேன். என் கசின் இங்கு வசிப்பதால் அடிக்கடி வருகிறேன். கன்னட படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நான் ரொம்ப பிசி.

மும்பை

மும்பை

நான் தனியாக வசித்தாலும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் என் பெற்றோர் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடுவேன். ஒன்று நான் மும்பைக்கு செல்வேன் இல்லை என் குடும்பத்தார் நான் இருக்கும் இடத்திற்கு வருவார்கள்.

லூசு

லூசு

நான் கொஞ்சம் லூசு. ரொம்ப தெளிவாக இருந்தால் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடியாது. நான் முன்னேறியதற்கு ஒழுக்கமும் காரணம். நான் ஒரு ஸ்டார் என்பதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.

காட்பாதர்

காட்பாதர்

நான் 22 வயதில் நடிக்க வந்தேன். எனக்கு எந்த காட்பாதரும் இல்லை. நான் கஷ்டப்பட்டு முன்னேறினேன். பல தவறுகள் செய்தேன், எனக்கு இஷ்டமில்லாத படங்களிலும் நடித்தேன். அதன் பிறகே முடியாது என்று கூற கற்றுக் கொண்டேன்.

தமிழ்

தமிழ்

நான் தெலுஹ்கில் சரளமாக பேசுவேன். ஆனால் தமிழ் அப்படி முடியவில்லை. இருப்பினும் கற்றுக் கொண்டிருக்கிறேன். தமன்னா, ராணா, இயக்குனர் வம்சி ஆகியோருடன் நான் நெருக்கமாக உள்ளேன். ஆனால் என் பள்ளி, கல்லூரி தோழிகள், என் தங்கை எனக்கு மிகவும் நெருக்கம்.

English summary
Actress Kajal Agarwal who is busy in Kollywood and Tollywood said that she is little mad. She added that, one cannot survive in film industry if he/she is too sane.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil