»   »  விஜய்யை இன்னும் காதலிக்கிறேன், இனியும் காதலிப்பேன்: அமலா பால்

விஜய்யை இன்னும் காதலிக்கிறேன், இனியும் காதலிப்பேன்: அமலா பால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் விஜய்யை பிரிந்துவிட்டாலும் அவரை இன்னும் காதலிப்பதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

நடிகை அமலா பாலும், இயக்குனர் ஏ.எல். விஜய்யும் காதலித்து திருமணம் செய்த வேகத்தில் பிரிந்துவிட்டனர். விவாகரத்து கோரி இருவரும் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் விஜய் மற்றும் திரையுலகம் பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அமலா பால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

புது வாழ்க்கை

புது வாழ்க்கை

புது வாழ்க்கையை துவங்கியது போன்று உணர்கிறேன். 18 வயதில் நடிக்க வந்த எனக்கு 23 வயதில் திருமணமாகி 24 வயதில் இருவரும் பிரிந்துவிட்டோம். எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லாததால் தவறுகள் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.

விஜய்

விஜய்

விஜய்யை பிரிந்த பிறகு அழுதேன். ஆனால் அதில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டேன். நான் இன்னும் விஜய்யை காதலிக்கிறேன், இனியும் காதலிப்பேன். அவர் எப்பொழுதுமே என் வாழ்வின் மிகவும் ஸ்பெஷலான நபராக இருப்பார். விட்டுவிடுவதும் கூட காதல் தான்.

பிரிவு

பிரிவு

விஜய்யை பிரியும் முடிவு தான் என் வாழ்வின் மிகவும் கடினமான முடிவு. யாருமே பிரிவதற்காக திருமணம் செய்வது இல்லை. வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.

திருமணம்

திருமணம்

விஜய்யை திருமணம் செய்ய நான் எடுத்த முடிவில் தவறு இல்லை. நான் தவறான வயதில் திருமணம் செய்து கொண்டேன். 20களின் துவக்கத்தில் திருமணம் செய்வது நல்லது அல்ல. அதற்காக அது பற்றி நான் குறை கூறவில்லை.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

அடுத்தடுத்து படங்களில் நடிக்காமல் இருந்தபோது நான் தனியாக பல இடங்களுக்கு பயணம் செய்தேன். புதிய இடம், கலாச்சாரங்களை பார்த்தது அருமையான அனுபவம். அந்த அனுபவம் என்னை நான் புரிந்துகொள்ள உதவியது.

English summary
Actress Amala Paul said that she still loves her ex-husband AL Vijay and will always love him.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil