»   »  நடிப்பதை நான் ஏன் நிறுத்த வேண்டும்... இரு புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்! - த்ரிஷா

நடிப்பதை நான் ஏன் நிறுத்த வேண்டும்... இரு புது படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்! - த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணமானாலும் நான் நடிப்பதை நிறுத்தப் போவதில்லை. புதிய படங்களில் ஒப்பந்தமாகப் போகிறேன் என்று நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் வரும் ஜனவரி 23-ம் தேதி நடக்கிறது. இதனை இன்று அறிவித்துள்ள த்ரிஷா, தான் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று வந்த செய்திகளை மறுத்துள்ளார்.

I never quits acting career, says Trisha

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நடிப்பதை நிறுத்தும் எண்ணமே எனக்கு இல்லை. நான் ஏன் நிறுத்த வேண்டும்..? சொல்லப் போனால் இனிமேல் புதுப்படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறேன். இந்த 2015-ல் மட்டும் எனது நான்கு படங்கள் வெளிவரவிருக்கின்றன," என்று கூறியுள்ளார்.

I never quits acting career, says Trisha

வருண் மணியன் தொழிலதிபர் மட்டுமல்ல.. தயாரிப்பாளரும் கூட. வாயை மூடிப் பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களைத் தயாரித்துள்ள அவர், மேலும் இரு புதிய படங்களைத் தயாரித்து வருகிறார். கணவருடன் இணைந்து இந்த தயாரிப்புப் பணிகளிலும் ஈடுபடப் போகிறாராம் த்ரிஷா.

English summary
Actress Trisha has announced that she is not quitting her acting career.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil