»   »  சினிமாவில் பணத்தை விட நடிப்பே முக்கியம்- இனியா

சினிமாவில் பணத்தை விட நடிப்பே முக்கியம்- இனியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பணத்தை விட திறமையான நடிகை என்ற பெயரை வாங்கவே நான் விரும்புகிறேன் என்று நடிகை இனியா தெரிவித்து இருக்கிறார்.

யுத்தம் செய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இனியா தொடர்ந்து மவுனகுரு, வாகை சூடவா, அம்மாவின் கைபேசி போன்ற படங்களில் நடித்து நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரைப் பெற்றார்.

I Want to buy the name for the Talent Actress - Iniya

கதாநாயகி மட்டுமின்றி ஒரு பாடல் மற்றும் வில்லி வேடங்களிலும் நடித்து நான் எந்த வேடத்தையும் ஏற்பேன் என்று இயக்குநர்களுக்கு சொல்லாமல் சொல்லிய இனியா தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்பதைவிட நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயரை வாங்கவே தான் விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாள உலகில் பிரபலமாக இருக்கும் இனியா தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார்.

வைகை எக்ஸ்பிரஸ், கரையோரம் மற்றும் காதல் சொல்ல நேரமில்லை போன்ற படங்களில் நடித்திருக்கும் இனியாவிற்கு தமிழில் ரஜினி, விஜய் மற்றும் அஜீத்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது கனவாம்.

English summary
"I Want to buy the name for the Talented Actress than Money" Tamil Young Actress Iniya Says in Karaiyoram Movie Press Meet."I Want to buy the name for the Talented Actress than Money" Tamil Young Actress Iniya Says in Karaiyoram Movie Press Meet.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil