Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நான் மாடலாக போறேன்னு சொன்னதும்.. என்னோட நண்பர்களே கேலி செய்தார்கள்!
சென்னை: பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் தென் இந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ளார்
ஹீரோ மற்றும் மாநாடு என தமிழில் இதுவரை தமிழில் நடித்த இரண்டு படங்களிலுமே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக உள்ளார்
இந்த நிலையில் சிறு வயதில் தான் குண்டாக இருந்த போது மாடலாக போகிறேன் எனக் கூறியதும் நண்பர்கள் அனைவரும் கேலி செய்ததாக கூறியுள்ளார்.
இரட்டை வேடம்,மதுரை தாதா...அஜித்தின் அடுத்த பட டைரக்டர் இவரா?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் ஹீரோவாக தெலுங்கில் நடித்த ஹலோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் முதல்முறையாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷனின் மகளான இவர் இப்போது இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ளார். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் கால் தடத்தை பதித்த இவருக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது தனது க்யூட் நடிப்பின் மூலம் ரசிகர்களை முதல் படத்திலேயே கல்யாணிக்கு தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஹீரோ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆந்தலாஜி படங்களில் நடித்து வந்த கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்து நடித்தார்.

சூப்பர் ஹிட் வெற்றி
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்புவின் மிரட்டலான நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்திய கல்யாணி பிரியதர்ஷனுக்கு இப்பொழுது மலையாளத்தில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் ஹீரோவாக நடித்த ஹ்ரிதயம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் தனது க்யூட் நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட கல்யாணி பிரியதர்ஷன் கடைசியாக மோகன்லாலுடன் இணைந்து ப்ரோ டாடி என்ற படத்தில் நடித்தார்

சிறுவயதில் குண்டாக இருப்பதால்
இப்பொழுது தள்ளுமால என்ற படத்தில் நடித்து வருகிறார் அனைவரும் ரசிக்கும் நேர்த்தியான அழகு கிளாமர் காட்டாத நடிப்பு என தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் சிறுவயதில் சற்று உடல் எடை கூடியவராக இருந்துள்ளார். பார்க்க குண்டாக இருப்பதால் பலரும் இவரை கேலி செய்து வந்துள்ளனர்.

நண்பர்களே கிண்டல் செய்தார்கள்
அதுமட்டுமல்லாமல் ஒரு நாள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் ஒரு மாடலாக போறேன் என்று சொன்னதற்கு அனைவரும் கேலி செய்தனர். உன் சைஸ்க்கு உன்னால எல்லாம் எப்படி மாடலாக முடியும் என என்னை கிண்டலாக பேசினார்கள் . அந்த வெறியில் உடல் எடையை குறைத்தேன் இப்பொழுது மாடலிங்கையும் தாண்டி கதாநாயகியாக ஆகியுள்ளேன் என தனது வாழ்க்கையில் பட்ட அவமானங்களையும் தாண்டி சாதித்துள்ளதை நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பகிர்ந்துள்ளார்.