»   »  ஜாக்கி சானுக்காக கத்ரீனாவுக்கு டேட்ஸ் இல்லாதது இலியானாவுக்கு நல்லதா போச்சு

ஜாக்கி சானுக்காக கத்ரீனாவுக்கு டேட்ஸ் இல்லாதது இலியானாவுக்கு நல்லதா போச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: குங்ஃபூ யோகா என்ற சர்வதேச படத்தில் ஜாக்கி சான் ஜோடியாக கத்ரீனா கைஃபுக்கு பதில் இலியானா நடிக்க உள்ளாராம்.

ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஜாக்கி சானை வைத்து எடுக்கும் படம் குங்ஃபூ யோகா. சர்வதேச படமாக உருவாகும் இதில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தான் ஹீரோயின் என்று கூறப்பட்டது. ஆனால் டேட்ஸ் இல்லாததால் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று கத்ரீனா தெரிவித்துள்ளார்.

Ileana replaces Katrina Kaif in film opposite Jackie Chan

இதையடுத்து அந்த படத்தில் இலியானா நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் செட்டில் ஆன இலியான ஒரு குட்டி பிரேக் எடுத்திருந்தார். இந்நிலையில் அவர் ஜாக்கி சான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்தில் பாலிவுட் நடிகர் சோனு சூதும் நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையான குங்ஃபூ யோகா துபாய், பெய்ஜிங் மற்றும் இந்தியாவில் படமாக்கப்படுகிறது.

ஜாக்கி சான் படத்தில் ஆமீர் கானும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் தங்கால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதால் ஜாக்கி சான் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

English summary
As Katrina Kaif has no dates for Jackie Chan's Kung Fu Yoga, it is Ileana who is going to act in that action movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil