»   »  3 வேளையும் சோறு.. நோ எக்ஸர்சைஸ் - "குண்டு" அனுஷ்காவின் ரகசியம் இதான் பாஸ்!

3 வேளையும் சோறு.. நோ எக்ஸர்சைஸ் - "குண்டு" அனுஷ்காவின் ரகசியம் இதான் பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இஞ்சி இடுப்பழகியில் அநியாயத்திற்கு உடலை ஏற்றி இறக்கிய அனுஷ்கா தற்போது அந்த இரகசியத்தினை வெளியிட்டு இருக்கிறார்.

உடல் எடையை ஏற்றுவதற்கு 3 நேரமும் அரிசிச்சோறு சாப்பிட்டேன் மேலும் எந்தவிதமான உடற்பயிற்சியையும் செய்யாமல் இருந்ததால் உடல் எடை அதிகரித்தது என்று கூறியிருக்கிறார்.

ஆர்யா அனுஷ்கா நடிப்பில் உருவாகியிருக்கும் இஞ்சி இடுப்பழகி படம் ரசிகர்களிடம் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது, விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் அனுஷ்காவின் குண்டான தோற்றம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்தப் படத்திற்காக தான் மேற்கொண்ட பயிற்சிகள் மற்றும் உணவுமுறை பற்றி சமீபத்தில் மனந்திறந்து இருக்கிறார் நடிகை அனுஷ்கா, அவை எந்த மாதிரியான முயற்சிகள் என்று பார்க்கலாம்.

கொடியிடை அனுஷ்கா

கொடியிடை அனுஷ்கா

தமிழ் மற்றும் தெலுங்குலகில் அழகான நடிகையாக கொடியிடைக்கு சொந்தக்காரராகத் திகழ்ந்த நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக பல கிலோக்களை ஏற்றி "குண்டுப் பெண்ணாக" மாறினார்.

நடிகர்கள் மட்டுமே

நடிகர்கள் மட்டுமே

இதுவரை நடிகர்கள் மட்டுமே இந்த மாதிரியான செயல்களை செய்து வந்தனர், தற்போது முதன்முறையாக அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது தோற்றத்தை ஏற்றி இறக்கி காட்டியிருக்கிறார். இதற்காக திரையுலகில் பல முக்கியமானவர்களின் பாராட்டுகளையும் அனுஷ்க பெற்றார்.

ரகசியத்தை வெளியிட்டார்

ரகசியத்தை வெளியிட்டார்

தனது தோற்றம் பற்றிய ரகசியத்தை சமீபத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் அனுஷ்கா " நான் இந்தப் படத்திற்காக 16 முதல் 17 கிலோ உடல் எடையை அதிகரித்தேன். குறிப்பாக எனது முகம் மற்றும் தோள்கள் எடையைக் கூட்டி இருந்தேன். இதற்காக 3 வேளையும் அரிசிச்சோறு உண்டேன் மற்றும் கர்போஹைட்ரெட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டேன்.

உடற்பயிற்சியை கைவிட்டேன்

உடற்பயிற்சியை கைவிட்டேன்

உணவுகளை எடுத்துக் கொண்டதோடு உடற்பயிற்சியையும் கைவிட்டேன், இதனால் நான் விரும்பிய தோற்றம் எனக்குக் கிடைத்தது. என்று இஞ்சி இடுப்பழகி படத்தின் ரகசியத்தை எடுத்துக் கூறியிருக்கிறார் அனுஷ்கா.

பாகுபலி 2 வுக்காக

பாகுபலி 2 வுக்காக

"தற்போது பாகுபலி 2 படத்தின் ஷூட்டிங் செப்டெம்பர் மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக மீண்டும் எனது உடல் எடையைக் குறைக்க இருக்கிறேன். தற்போது 6 கிலோ வரை இந்தப் படத்திற்காக குறைத்து இருக்கிறேன்" என்று தனது நடிப்பு ரகசியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் அனுஷ்கா.

இந்த அர்ப்பணிப்பு உங்களை எங்கயோ கொண்டு போகப்போகுது....

English summary
Anushka Reveals the Secret Behind Her inji Idupazhagi look in a Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil