»   »  இஞ்சி இடுப்பழகியை நம்பும் அனுஷ்கா

இஞ்சி இடுப்பழகியை நம்பும் அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இஞ்சி இடுப்பழகி படத்தின் மையக்கருத்தை தான் நம்புவதாக நடிகை அனுஷ்கா தெரிவித்து இருக்கிறார். அனுஷ்கா, ஆர்யா, ஊர்வசி, சோனல் சவுகான் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இஞ்சி இடுப்பழகி.

குண்டாக இருக்கும் ஒரு பெண் எப்படி தனது எடையைக் குறைத்து அழகாக மாறுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதையாகும். இதற்காக தனது உடல் எடையை அதிகரித்து இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா.

தமிழில் இஞ்சி இடுப்பழகி, தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் இப்படம் உருவாகி இருக்கிறது.

இஞ்சி இடுப்பழகி

இஞ்சி இடுப்பழகி

சவுந்தரா என்ற பெயரில் இப்படத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவிற்கு ஸ்வீட்டி என்ற செல்லப்பெயரும் படத்தில் உண்டாம். அனுஷ்காவின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி அனுஷ்காவை வற்புறுத்தி உடல் எடையைக் குறைக்க சொல்வாராம். ஆனால் அனுஷ்கா அவரது அம்மா பேச்சை துளியும் காதில் போட்டுக் கொள்ளாமல் நொறுக்குத்தீனிகளை நன்றாக வெளுத்து வாங்குவாராம். இந்தப் படத்தின் கருத்தை நம்பும் அனுஷ்கா அந்த நம்பிக்கையின் பேரில் சுமார் 20 கிலோ எடையை அதிகரித்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.

பாகுபலி, ருத்ரமாதேவி

பாகுபலி, ருத்ரமாதேவி

இந்தப் படத்தின் கதையை அனுஷ்காவிடம் கூறும்போது அவர் பாகுபலி மற்றும் ருத்ரமாதேவி போன்ற சரித்திரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். எனினும் இந்தப் படத்தின் கதை அவரைக் கவர்ந்ததால் இந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

செயற்கையாக

செயற்கையாக

மேலும் செயற்கையாக உடல் எடையை அதிகரித்து நடிக்கலாம் என்று படக்குழுவினர் கூறியபோது அதனை மறுத்து இயற்கையாக தனது உடலை வருத்தி 20 கிலோ எடையை அதிகரித்து இருக்கிறார் அனுஷ்கா. இவரின் அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பைப் பார்த்து படக்குழுவினர் வியந்து போனார்களாம்.

உடல் எடை

உடல் எடை

இளம்பெண்கள் மத்தியில் உடல் எடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இஞ்சி இடுப்பழகி இருக்கும். இந்தப் படத்தின் மையக் கருத்து என்னை மிகவும் கவர்ந்தது என்று படத்தின் இயக்குநர் பிரகாஷ் கொவேலாமுடி கூறியிருக்கிறார்.

சிறப்புத் தோற்றங்களில்

சிறப்புத் தோற்றங்களில்

இஞ்சி இடுப்பழகியில் ஆர்யா, அனுஷ்கா தவிர ஜீவா, நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துக் கொடுத்திருக்கின்றனர்.விரைவில் திரைக்கு வரும் இஞ்சி இடுப்பழகி இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Actress Anushka Trust in the Concept of Inji Iduppazhagi. Arya, Anushka Starrer Inji Iduppazhagi (Size Zero) will be Released Soon.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil