»   »  ஒரு பெண்ணை அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா?: த்ரிஷா ஆவேசம்

ஒரு பெண்ணை அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா?: த்ரிஷா ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பெண்ணையும், அவரது குடும்பத்தையும் அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா? என நடிகை த்ரிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பின் ஆதரவாளரான த்ரிஷாவின் கர்ஜனை படப்பிடிப்பு தளத்தை நாம் தமிழர் கட்சியினர், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

இந்நிலையில் த்ரிஷா மரணம் அடைந்துவிட்டதாக ஒரு போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பார்த்த த்ரிஷா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அதிர்ச்சி

தனக்கு இரங்கல் போஸ்டர் போட்டதை பார்த்த த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் போஸ்டரில் உள்ள கீழ்த்தரமான வார்த்தைகளை பார்த்து அவர் கோபம் அடைந்துள்ளார்.

தமிழ் கலாச்சாரமா?

ஒரு பெண்ணையும், அவரது குடும்பத்தையும் அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா? உங்களை தமிழன் என்று சொல்லிக்கொள்ளவோ, தமிழ் கலாச்சாரம் பற்றி பேசவோ வெட்கப்பட வேண்டும் என த்ரிஷா ட்வீட்டியுள்ளார்.

பயப்பட மாட்டேன்

இந்த உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் எப்பொழுதும் பணிந்ததும் இல்லை, பயப்படுவதும் இல்லை என த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நன்றி

நேற்று எனக்கு ஆதரவு தெரிவித்து, பாதுகாப்பு அளித்த கர்ஜனை படக்குழுவுக்கு என் நன்றி. எனக்கு ஆதரவாக இருக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி என்று ட்வீட்டியுள்ளார் த்ரிஷா.

English summary
Actress Trisha tweeted that, 'Disrespecting a woman and her family is tamil culture?You should be ashamed to call urself a Tamilian or even speak about Tamil culture.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil