விஜய் 61... ஜோதிகா இருக்கிறாரா இல்லையா?
திருமணத்துக்குப் பிறகு ஒரு இடைவெளிவிட்டு மீண்டும் நடிக்க வரும் ஹீரோயின்கள் பெரும்பாலும் அக்கா அண்ணி பாத்திரங்களோடு திருப்தியடைந்துவிடுவார்கள்.
ஆனால் சிலர்தான் மீண்டும் ஹீரோயினாகவே தொடர்வார்கள் அமலா பால், ஜோதிகா மாதிரி.

36 வயதினிலே படத்துக்குப் பிறகு, மீண்டும் ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திலேயே நடித்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஜோதிகாவையும் ஒரு நாயகியாக்க பேசினர். முதலில் ஒப்புக் கொண்ட ஜோதிகா, அட்லீயிடம் கதை கேட்டிருக்கிறார். பின்னர் கதையில் சில மாறுதல்களைச் சொல்லி, அதைச் செய்தால் நடிகேகதே தயார் என்றாராம்.
அப்போதைக்கு தலையை ஆட்டிவிட்டு வந்த அட்லீ, அதன் பிறகு ஜோதிகாவிடம் பேசவே இல்லையாம். சமீபத்தில் தொடங்கிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புக்கும் ஜோதிகா வரவில்லை.
அதான் ஜோ நடிக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் தொடர்கிறது!


Click it and Unblock the Notifications











