»   »  செருப்பு, நகையைத் தொடர்ந்து... உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க சமந்தா முடிவு?

செருப்பு, நகையைத் தொடர்ந்து... உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க சமந்தா முடிவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நிறுவனத்தின் உள்ளாடைகளுக்கான விளம்பரத்தில் நடிக்க நடிகை சமந்தா ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் சொல்லிக் கொள்கிறபடி வெற்றிப் படங்கள் எதையும் தராவிட்டாலும், குறிப்பிடத்தக்க நடிகையாகவே வலம் வருகிறார் நடிகை சமந்தா. தெலுங்கில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்கில் நடித்தவருக்கு, அதன் பின் அங்கு வெளிவந்த பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அதனால், தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார் சமந்தா.

Is Samantha Greedy For Money?

இந்நிலையில், இந்தாண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் தலா 3 படங்கள் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். இதுதவிர விக்ரம் ஜோடியாக இவர் நடித்துள்ள பத்து எண்றதுக்குள்ள படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.

பரபரப்பாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சமந்தாவின் கவனம் விளம்பரங்கள் மீதும் உள்ளது. ஏற்கனவே, அவர் பல முன்னணி நிறுவனங்களின் நகைகள், செருப்புகள் போன்றவற்றின் விளம்பரங்களில் தோன்றி வருகிறார்.

இந்நிலையில், தற்போது புதிதாக உள்ளாடை நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதற்காக சமந்தாவிற்கு ரூ. 6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

நல்ல வழியில் பணம் சம்பாதிப்பது தவறேயில்லை என்பது தான் சமந்தாவின் கொள்கை. இதனை அவரே பல பேட்டிகளில் திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறார். எனவே, அவரது இந்த உள்ளாடை விளம்பர முடிவு அதிர்ச்சி அளிக்கவில்லை என்கிறது அவரது நட்பு வட்டாரம்.

இந்த புதிய விளம்பர ஒப்பந்தத்தின் படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாடை விளம்பரங்கள் மற்றும் அந்த நிறுவனம் தொடர்பான விழாக்களில் சமந்தா பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, சல்மான்கான், அக்‌ஷய்குமார், பிபாசா பாசு, சுனில் ஷெட்டி என உள்ளாடை விளம்பரங்களில் நடித்த திரைப் பிரபலங்கள் பலர் உள்ளனர். இவர்களைத் தனது முன்மாதிரியாக வைத்து தான் இந்த விளம்பரத்தில் நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

ஆனால், இது தொடர்பாக இதுவரை சமந்தா தரப்பில் இருந்தோ, அந்த உள்ளாடை நிறுவனத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    "The deal with this leading innerwear brand is for two years and Samantha is supposed to appear in their commercials and promotional events", said a reliable source.
    Please Wait while comments are loading...