சோஷியல் மீடியாவில் இருந்து விலகிட்டாரா சமந்தா?...குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை : தென்னிந்தியா சினிமாவை தாண்டி தற்போது பான் இந்தியா நடிகையாகி விட்டார் சமந்தா. பல மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஃபேமிலி மேன் வெப்சீரிசிற்கு பிறகு பாலிவுட்டிலும் பிரபல நடிகையாகி விட்டார். அதிலும் புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய ஊ சொல்றியா மாமா பாடல் செம ஹிட் ஆனதால், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

தெலுங்கு, தமிழ், இந்தி மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் ரூசோ ப்ரதர்ஸ் இயக்கும் Citadel படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார். தெலுங்கில் இவர் நடித்து வரும் பல படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

கிளாமர் போட்டோஷுட்

கிளாமர் போட்டோஷுட்

கணவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு சோஷியல் மீடியாவில் செம பிஸியாக அடிக்கடி போஸ்ட் போட்டு வந்தார் சமந்தா. கிமாளர் தூக்கலாக போட்டோஷுட்கள் நடத்தி வந்தார். இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, டிரெண்டிங் ஆக வைத்தார் சமந்தா. சமந்தா பற்றிய தகவல்கள் ஏதாவது ஒன்று சோஷியல் மீடியாவில் பரவுவதும், அது வைரலாக்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது.

சோஷியல் மீடியாவிலிருந்து விலகிட்டாரா

சோஷியல் மீடியாவிலிருந்து விலகிட்டாரா

இந்த சமயத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சோஷியல் மீடியாவில் இருந்து விலகியே இருந்து வருகிறார் சமந்தா. கடைசியாக ஜுலை 16 ம் தேதி தான் இன்ஸ்டாகிராமில் விளம்பர போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு பிறகு போஸ்ட் எதுவும் பதிவிடாமல் உள்ளதால் சமந்தா சோஷியல் மீடியாவில் இருந்து விலகி விட்டாரா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

உண்மை காரணம் என்ன?

உண்மை காரணம் என்ன?

இது பற்றி சமந்தாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, சமந்தா பற்றி மீடியாக்களில் பல விதமான தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அவர் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.ரூசோ ப்ரதர்ஸ் இயக்கும் படத்திற்காக தற்காப்பு கலைகளுக்காக பயிற்சி எடுத்து வருகிறார். புதிய படத்திற்காக தயாராகி வருவதால் தான் சோஷியல் மீடியா பக்கம் வருவதில்லை. விரைவில் அவரின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.

வரிசையாக காத்திருக்கும் படங்கள்

வரிசையாக காத்திருக்கும் படங்கள்

கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சமந்தா நடிப்பில் வெளியானது. இதைத் தொடர்ந்து யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் சமந்தா நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X