»   »  ஹீரோக்களுக்கு ஒரு நியாயம், ஹீரோயின்களுக்கு ஒரு நியாயமா: பிரியங்கா பாய்ச்சல்

ஹீரோக்களுக்கு ஒரு நியாயம், ஹீரோயின்களுக்கு ஒரு நியாயமா: பிரியங்கா பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹீரோக்களுக்கு ஒரு நியாயம், ஹீரோயின்களுக்கு ஒரு நியாயமா என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நாயகிகளான பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் ஹாலிவுட் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசப்படுகிறது.

இது குறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில்,

நடிகர்கள்

நடிகர்கள்

ஒரு நடிகையோடு மற்றொரு நடிகையை ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் யாரும் நடிகர்களை ஒப்பிடுவது இல்லை. நடிகர்கள் என்றால் ப்ரோமான்ஸ், நடிகைகள் என்றால் மட்டும் சண்டையா?

ஒப்பீடு

ஒப்பீடு

நடிகைகளை ஒப்பிட்டு பேசுவதில் நியாயம் இல்லை. நானும், தீபிகாவும் வித்தியாசமானவர்கள். எங்களின் விருப்பங்கள் வேறு வேறாக உள்ளது. நாங்கள் எங்களுக்கு பிடித்தவற்றை செய்கிறோம்.

சண்டை

சண்டை

இரு நடிகைகளுக்கு இடையே போட்டி இருக்கும். அதற்காக இரு நடிகைகளுக்கும் ஆகாது, சண்டை என்று எல்லாம் கூறுவது நியாயம் இல்லை. ஒரு நடிகையின் காலை வாரி விட மற்றொரு நடிகை விரும்புவதாக மக்கள் நினைக்கிறரார்கள்.

போட்டி

போட்டி

வேலை என்று வந்தால் போட்டி இருக்கத் தான் செய்யும். அது நடிகைகள் ஆகட்டும், நடிகர்கள் ஆகட்டும். இதை நடிகைகளை மட்டும் குறைத்து பேசக் கூடாது.

English summary
Priyanka feels that people don't compare male actors and call their friendship 'bromance' but when it comes to female actors she said there is this tag of 'cat fights' and the comparisions are unjust.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil