»   »  உங்க வலிக்கு பலன் கிடைக்கும்... சிம்புவுக்கு ஹன்சிகா ஆறுதல் + வாழ்த்து

உங்க வலிக்கு பலன் கிடைக்கும்... சிம்புவுக்கு ஹன்சிகா ஆறுதல் + வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாலு படம் ரிலீசாவது தொடர்பாக நடிகர் சிம்புவிற்கு ஹன்சிகா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு-ஹன்சிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் வாலு. இப்படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து நாளை ரிலீசாக உள்ளது. நிக் ஆர்ட்ஸ் தயாரித்திருந்த இப்படத்தை டி.ஆர் வெளியிடுகிறார்.


மூன்று வருடங்களுக்கு பிறகு ரிலீசாகும் சிம்பு படம் என்பதால், அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். சிம்புவிற்கு ரஜினி உட்பட பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், இப்படத்தின் நாயகியான ஹன்சிகா தனது டிவிட்டர் பக்கத்தில் சிம்புவிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-


ஒருவழியாக...

கடைசியாக ‘வாலு' படம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.


நீண்ட பயணம்...

இது ஒரு நீண்ட பயணமாக அமைந்திருக்கிறது. இப்படத்தை இயக்கிய விஜய் சந்தருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.


பலன் கிடைத்திருக்கிறது...

பலன் கிடைத்திருக்கிறது...

இவ்வளவு நாட்கள் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. இவருடைய கடின உழைப்பை பாராட்டுகிறேன்.


சிம்புவிற்கு வாழ்த்துக்கள்...

சிம்புவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இப்படத்திற்காக உங்களுடைய வலி, தியாகம், கடின உழைப்பு என அனைத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கான வெகுமதி கிடைக்கவுள்ளது.


ஊக்குவித்தவர்கள்...

விஜய், டி.ஆர், ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இல்லையென்றால் இப்படம் வெளியாவதற்கு சாத்தியம் இல்லை. இவர்கள் அனைவரும் படத்தை ஊக்குவிக்கவும், ஆதரவாகவும் இருந்திருக்கிறார்கள்.


நன்றிகள்...

நன்றிகள்...

இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்'' என்றார்.


English summary
'All the best to iam_str who has nailed in the movie, all the pain,sacrifices and hardwork will be reward . It's time to shine’ actress Hansika tweeted.
Please Wait while comments are loading...