»   »  சண்டைகோழி 2ல் நான் நடிக்கலையே… அக்ஷரா ஹாசன்

சண்டைகோழி 2ல் நான் நடிக்கலையே… அக்ஷரா ஹாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டைக்கோழி படத்தில் விஷாலுடன் நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. நான் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவும் இல்லை என்று நடிகை அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார்.

விஷால் தற்போது பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார், இப்படத்திற்கு பிறகு அவர் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன.

விஷால், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து 2005-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய ‘சண்டைக்கோழி' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்கபோவதாகவும் அவருக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகின.

விஷால் ஜோடியாக யார்?

விஷால் ஜோடியாக யார்?

விஷால் ஜோடியாக நடிக்கப்போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று அக்ஷரா ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக யாரும் தன்னை அணுகவில்லை என்றும் அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் படத்தில்

பாலிவுட் படத்தில்

அக்ஷரா ஹாசன், இந்தியில் பால்கி இயக்கிய ‘ஷமிதாப்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இப்படத்தில் அவருடைய நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது. இதனையடுத்து பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தில் நடிக்க வைக்க அணுகினர்.

நடிக்க மறுப்பு

நடிக்க மறுப்பு

அக்ஷரா எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில், லிங்குசாமி-விஷால் கூட்டணியில் வெளிவந்த ‘சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

விஷால் ஜோடி யார்?

விஷால் ஜோடி யார்?

சண்டைக்கோழி முதல் பாகத்தில் நடித்த விஷால்தான் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அப்போ மீரா ஜாஸ்மின் வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்களோ? லிங்குசாமிதான் சொல்லவேண்டும். பேசாமல் மீரா ஜாஸ்மின் நடித்தாலே நன்றாகத்தான் இருக்கும் ஹீரோ ஒத்துக்கொள்ள வேண்டுமே?

கதைய மாத்துங்க

கதைய மாத்துங்க

சண்டைக்கோழி படம் எடுத்த போது அறிமுக நடிகராக இருந்தவர் விஷால், அப்போது லிங்குசாமி அதிரடி இயக்குநர். இப்போதோ விஷால் பல படங்களில் நடித்து விட்டார் தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். லிங்குசாமி இயக்கிய பல படங்கள் தோல்வியடைந்துள்ளதால் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் லிங்குசாமி. ஆனால் கதையில் பல மாற்றங்களை சொல்லி வருகிறாராம் விஷால்.

English summary
Actress Akshara Haasan who was reported to be debuting in Kollywood, pairing Vishal in his upcoming film 'Sandakozhi 2' which is to be directed and produced by Lingusamy.
Please Wait while comments are loading...