»   »  நவீன ' ஜெகன் மோகினி'

நவீன ' ஜெகன் மோகினி'

Subscribe to Oneindia Tamil
Click here for more images
அந்தக் காலத்தில் தென்னகத்து மக்களை திகிலடைய வைத்து பயமுறுத்திய ஜெகன்மோகினி மீண்டும் ரீமேக் ஆகவுள்ளது. இதில் பேய் கேரக்டரில் நடிக்க நமீதாவை அணுகியுள்ளனராம்.

1978ல் வெளியான ஹிட் படம் ஜெகன்மோகினி. தெலுங்கில் உருவான இப்படம் தமிழிலும் வெளியாகி ரசிகர்களை பயமுறுத்திய ஹிட் படம். எந்த தொழில்நுட்பமும் இல்லாத அந்தக் காலத்தில் விட்டலாச்சார்யா காட்டியிருந்த வித்தைகளும், படத்தில் இடம்பெற்ற மாயாஜாலக் காட்சிகளும் இன்றைய திரையுலகினருக்கு சவாலாக இருக்க கூடியவை.

நரசிம்மராஜுவும், ஜெயமாலிணியும் ஜோடியாக நடித்திருந்த ஜெகன்மோகினியில் இடம் பெற்றிருந்த விஷூவல் வித்தைகள் இன்றளவும் ரசிக்க்க் கடியவையாக உள்ளன.

இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளது லட்சுமி மூவி மேக்கர்ஸ். பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் இப்படத்தை இயக்கவுள்ளார். ஜெயமாலிணி நடித்த கேரக்டரில் நடிக்க நமீதாவை அணுகியுள்ளனர்.

ஜெயமாலிணி ரேஞ்சுக்கு - பல வகையிலும் - இப்போதைக்கு இருப்பவர் நமீதாதான் என்பது இயக்குநரின் கணக்கு. அவர்தான் இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை அணுகியுள்ளனர்.

படத்தின் கதையைக் கேட்ட நமீதா, உடனே ஓ.கே. சொல்லவில்லையாம். யோசித்துக் கூறுவதாக சொல்லியுள்ளார். நமீதாவின் சம்மத்த்திற்காக லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் காத்துக் கொண்டுள்ளது.

' பேய்' ஆவாரா நமீதா?

Read more about: namitha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil