நான் பார்த்த முதல் முகம் நீ...அம்மா நினைவுகளில் மூழ்கிய ஸ்ரீதேவி மகள்

மும்பை : ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரும், மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்துள்ளார்.

வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் டிசம்பர் 5 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ நேற்று வெளியிடப்பட்டது. அம்மா சென்டிமென்ட் பாடலான இது பிளாஷ்பேக் பாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வலிமை செகண்ட் சிங்கிள்

வலிமை செகண்ட் சிங்கிள்

வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்தின் அம்மா ரோலில் நடிகை சுமத்திரா நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த சென்டிமென்ட் பாடலை சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். டைரக்டர் விக்னேஷ் சிவன் இந்த பாடலின் வரிகளை எழுதி உள்ளார்.

ஜான்வி போட்ட ட்வீட்

ஜான்வி போட்ட ட்வீட்

நான் பார்த்த முதல் முகம் நீ...நான் கேட்ட முதல் குரல் நீ...அம்மா என்ற இந்த வரிகளை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீதேவி - போனி கபூர் தம்பதியின் மூத்த மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் இந்த பாடல் வரிகளை, தமிழிலேயே ட்வீட் செய்துள்ளார். அம்மா ஸ்ரீதேவியுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பதிவிட்டு, அம்மா பற்றிய இந்த வரிகளை பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீதேவியின் திடீர் மரணம்

ஸ்ரீதேவியின் திடீர் மரணம்

இந்திய அளவில் பிரபல நடிகையான ஸ்ரீதேவி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் தேதி துபாயில் திருமண விழா ஒன்றிற்கு சென்றிருந்த போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, குளியல் அறையில் உயிரிழந்தார். கமல், ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரீதேவியின் திடீர் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அம்மா ஃபோட்டோ பகிர்ந்த ஜான்வி

அம்மா ஃபோட்டோ பகிர்ந்த ஜான்வி

ஒட்டுமொத்த திரையுலகமே ஒன்று கூடி அவருக்கு கண்ணீரஞ்சலி செலுத்தியது. ஸ்ரீதேவி பற்றிய நினைவுகளை பலரும் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் அப்பா போனி கபூர் தயாரித்து வரும் படத்தின் அம்மா சென்டிமென்ட் பாடலை குறிப்பிட்டு, அம்மா ஸ்ரீதேவியின் ஃபோட்டோவுடன் ஜான்வி கபூர் பகிர்ந்துள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

Recommended Video

நாக்கு முக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள்...தீயாய் வைரலாகும் வீடியோ
எப்போ தமிழில் நடிப்பீங்க

எப்போ தமிழில் நடிப்பீங்க

ஜான்வி கபூரின் இந்த ட்வீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. போனி கபூர் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த பதிவை ரீட்விட் செய்து வருகின்றனர். அதிகமானவர்கள் அம்மா, அப்பாவின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர் எப்போது நீங்கள் தமிழ் படங்களில் நடிப்பீர்கள் என ஆர்வமாக கேட்டுள்ளனர் ஜான்வி கபூரிடம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X