»   »  இது தான் முதல் பக்கமா?: டைம்ஸ் ஆப் இந்தியாவை விளாசிய நடிகை ஜூஹி சாவ்லா

இது தான் முதல் பக்கமா?: டைம்ஸ் ஆப் இந்தியாவை விளாசிய நடிகை ஜூஹி சாவ்லா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை ட்விட்டரில் விளாசித் தள்ளியுள்ளார்.

19ம் தேதி அன்று வந்த நாளிதழை பார்த்த அவர் நாளிதழின் முதல்பக்கத்தை புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் போட்டுள்ளார்.

பணம் தானா

பணம் தானா

டைம்ஸ் ஆப் இந்தியாவின் முதல்பக்கத்தில் ஆர்டீஸ் நிறுவனத்தின் விளம்பரப் புகைப்படத்தில் பெண் ஒருவர் அரைகுறை ஆடையில் இருக்கிறார். இதை பார்த்து தான் ஜூஹி கோபம் அடைந்து இது தான் ஒரு முன்னணி நாளிதழின் முதல்பக்கமா....???...நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்... பணம் தான் அனைத்துமா.... என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ்

நீ காண விரும்பும் மாற்றமாக நீ இரு என்று மகாத்மா காந்தி தெரிவித்துள்ளார். நாம் டைம்ஸ் ஆப் இந்தியா வாங்குவதை நிறுத்தப் போகிறேன் என்று ஜூஹி ட்வீட் செய்துள்ளார்.

தீபிகா

தீபிகா

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கிளீவேஜை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு அவரிடம் வசை வாங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா. டைம்ஸ் தீபிகாவை விளாச பதிலுக்கு அவர் நாளிதழை விளாசித் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊட்டி

அதே போல ஜூஹி சாவ்லா பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ஊட்டி சென்றாராம். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஊட்டி தாஜ் சவாய் ஹோட்டலில் உள்ளேன், பல ஆண்டுகள் கழித்து வந்துள்ளேன். ஊட்டி மிக அருமையாக உள்ளது. காலம் ஊட்டியை மாற்றவில்லை, பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நினைவுகள்

நினைவுகள்

யூக்கலிப்டஸ் மரங்கள், குளிர் காற்று, சூரியன், பூக்கள், தாஜ் சவாய் ஆகியவை என் தாய், என் படங்கள் உள்ளிட்ட பலவற்றை நினைவூட்டுகின்றன என்று ஜூஹி ட்வீட் செய்துள்ளார்.

English summary
Bollywood actress Juhi Chawla blasted Times of India for displaying a woman in skimpy clothes in its first page.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil