»   »  பெயர் மாறிய சிலந்தி!

பெயர் மாறிய சிலந்தி!

Subscribe to Oneindia Tamil

கெளதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடிக்கும் சிலந்தி படத்தின் பெயர்பச்சைக்கிளி முத்துச்சரம் என தூய தமிழில் மாற்றப்பட்டுள்ளது.

வேட்டையாடு விளையாடு படத்திற்கு முன்பு சிலந்தி படத்தைத்தான் முதலில்கெளதம் மேனன் ஆரம்பித்தார். ஆனால் படத்தை தொடருவதில் சில தாமதங்கள்ஏற்பட்டதால், சிலந்தியை விட்டு விட்டு வேட்டையாடு விளையாடுவுக்கு வந்துவிட்டார்.

இப்போது வேட்டையாடு முடிந்து, ரிலீஸ் ஆகி வசூலில் பின்னிக் கொண்டுள்ளது.இதனால் ஃப்ரீ ஆகியுள்ள கெளதம், சிலந்தியை முடிக்க வந்து விட்டார். ஜோதிகாநடித்த பெரும்பாலான காட்சிகளை ஏற்கனவே சுட்டு முடித்து விட்டாராம். ஒரு சிலகாட்சிகள் மட்டுமே நடிக்க வேண்டியுள்ளதாம்.

திருமணத்திற்குப் பின்பு நடிக்க மாட்டேன் என்று ஜோதிகா கூறியிருந்தாலும் கூடகெளதக்காக சிலந்தியில் பாக்கி உள்ள காட்சிகளை முடித்துத் தர ஒத்துக்கொண்டுள்ளாராம்.

படத்தை விரைவாக முடிக்கும் பொருட்டு படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் கெளதம்.

சீக்கிரம் படம் முடிந்து விடும் என்கிறார்கள். சரத்குமாருக்கு இதில் வித்தியாசமானகேரக்டராம். பேசப்படும் வகையில், அவரது கேரக்டர் இருக்கும் என்கிறார்கள்.

இப்போது படத்தின் பெயரை பச்சைக்கிளி முத்துச்சரம் என மாற்றியுள்ளனர். சிலந்திஎன்ற பெயர் தமிழா என்று சிலர் சந்தேகம் கிளப்பியதால், எதற்கு வம்பு என்றுதான்அதை மாற்றி விட்டனராம்.

டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று சிலந்தியை அதாவது பச்சைக்கிளிமுத்துச்சரத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் கெளதம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil