»   »  ஜோதிகா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்த படத்துக்கு தயாராகிறார்!

ஜோதிகா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்தது.. அடுத்த படத்துக்கு தயாராகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழாக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜோதிகா, அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.

நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, குடும்பம் குழந்தைகள் என ஒதுங்கி இருந்தார் ஜோதிகா.

Jyothika completes shooting

இந்நிலையில், மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வெற்றியடைந்த ‘ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன.

இதில், மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவை நடிக்க வைக்க படக் குழுவினர் முயற்சி செய்தனர். மஞ்சு வாரியாரின் சினிமா மறுபிரவேசத்துக்கு இந்தப் படத்தின் வெற்றி பெரிதும் உதவியது.

அதேபோல், இந்த படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைக்க முயன்றனர். சூர்யாவும், குடும்பத்தினரும் இதற்கு ஓகே சொன்னதால், ஜோதிகாவும் நடிக்க ஆரம்பித்தார். படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமே தயாரிக்கிறது. மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ்தான் தமிழிலும் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுவென நடந்து முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், ஜோதிகாவை இன்னொரு படத்திலும் நாயகியாக நடிக்கக் கேட்டு வருகின்றனர். கதை கேட்டு ஓகே சொல்லிவிட்டாராம் அவர். அநேகமாக இதில் சூர்யாவும் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

English summary
Actress Jyothika's re entry movie's shooting completed recently.
Please Wait while comments are loading...