நாச்சியார் படத்தால் கிடைத்த செம ஆஃபர்... வித்யா பாலன் வேடத்தில் நடிக்கும் ஜோதிகா!
Recommended Video

சென்னை : சமீபத்தில் பாலா இயக்கி வெளிவந்த 'நாச்சியார்' படம் மூலம் கொண்டாடப்படுகிறார் ஜோதிகா. இப்படத்தில் ஜோதிகா போலீஸாக நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு ஆகியோருடன் ஜோதிகா இணைகிறார்.
இந்நிலையில், பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்த 'தும்ஹரி சுலு' படத்தின் ரீமேக்கில் வித்யா பாலனின் வேடத்தில் நடிக்க இருக்கிறாராம் ஜோதிகா.

திருமணத்திற்கு பிறகு
ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பல வருடங்களாக திரையுலகத்தை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் அடுத்த ரவுண்ட் வருகிறார். '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' ஆகிய படங்களைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் 'நாச்சியார்' படத்தில் நடித்தார்.

ஜோதிகா
'நாச்சியார்' படத்தில் ஜோதிகா போலீஸாக நடித்திருக்கிறார். படத்தில் அவர் பேசிய சில வார்த்தைகள் ரிலீஸுக்கு முன்பே சர்ச்சையைச் சந்தித்தது. ஆனாலும் 'நாச்சியார்' படம் நல்ல நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

வித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா
இதனைத் தொடர்ந்து இந்தியில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் சாதனை செய்த 'தும்ஹரி சுலு' படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. நடிகை வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறாராம்.

ஆர்ஜே-வாக நடிக்கும் ஜோதிகா
ஒரு குடும்பப்பெண் ஒரு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகி எப்படி கலக்குகிறார் என்பது கதையாம். அந்தக் கதாபாத்திரத்தில் தான் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். மேலும் இப்படத்தை ராதாமோகன் இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, ராதாமோகனின் 'மொழி' படத்தில் வாய்பேச இயலாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார் ஜோதிகா.


Click it and Unblock the Notifications











