»   »  சே, மிஸ் பண்ணிட்டேனே.. வருத்தப்படும் ஜோதிகா!

சே, மிஸ் பண்ணிட்டேனே.. வருத்தப்படும் ஜோதிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பசங்க 2 படத்தில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்தை நழுவவிட்டது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான பசங்க 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியால் மகிழ்ந்து போன சூர்யா இயக்குநர் பாண்டிராஜ்க்கு காரையும், இசையமைப்பாளர் அரோல் கெரோலிக்கு தங்கச்சங்கிலியையும் பரிசளித்திருக்கிறார்.


மேலும் இப்படத்தில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்தைப் பாராட்டி அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Jyothika talks about Amala Paul role in pasanga 2

இப்படத்தில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.இந்நிலையில் நடிகை ஜோதிகா தான் அந்த வேடத்தை நழுவவிட்டதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.


அதாவது பசங்க 2வில் அமலாபால் ஏற்று நடித்த வேடத்திற்கு முதலில் ஜோதிகாவைத் தான் கேட்டார்களாம். ஆனால் அப்போது 36 வயதினிலே படத்தில் ஜோதிகா பிஸியாக நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.


அதனால் இந்தப் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கிக் கொடுப்பது ஜோதிகாவிற்கு சிரமமாக இருக்க, நடிக்க முடியாது என்று சொல்லி விட்டாராம்.


இப்பொது பசங்க 2 படத்திற்கும், அமலாபால் பாத்திரத்திற்கும் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து இந்தப் படத்தை நழுவ விட்டு விட்டேனே என்று வருத்தப்பட்டு வருகிறாராம் ஜோதிகா.

English summary
Actress jyothika said "I am Very Sad to miss this Opportunity for Amala Paul Character in Pasanga 2 Movie".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos