»   »  காஜல் அகர்வாலின் ஆசை இதுதான்... ஒரு படத்துலயாவது இப்படி நடிச்சிடணுமாம்..!

காஜல் அகர்வாலின் ஆசை இதுதான்... ஒரு படத்துலயாவது இப்படி நடிச்சிடணுமாம்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சினிமா நடிகைகளில் பலருக்கு நடிக்க வருவதற்கு முன்பு பல்வேறு கனவுகள் இருந்திருக்கும். சிலர், சினிமாவில் மார்க்கெட் போன பின்பு அவர்கள் கனவு கண்ட துறையைத் தேர்ந்தெடுப்பார்கள்.

குடும்ப சூழலாலும், வெவ்வேறு காரணங்களாலும் தங்களது கனவை நோக்கிப் பயணப்படாத பலர் சினிமாவிலும் உண்டு.

நடிகை காஜல் அகர்வால் சிறு வயது முதலே கனவாகக் கொண்டிருந்த விஷயத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

லட்சியம்

லட்சியம்

சினிமாவில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவருக்குமே அவர்களது லட்சியம் சினிமாதான் என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, வெவ்வேறான கனவுகள் சிறுவயதில் இருந்திருக்கும்.

கனவு

கனவு

சிலர் மிகவும் விரும்பியே சினிமாவுக்கு வந்திருப்பார்கள். இன்னும் சிலரோ, வேறு துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சூழல்களால் சினிமாவுக்கு வந்திருப்பார்கள். அவர்களுக்கும் கூட சினிமாவில் இருந்து விலகிய பிறகு தான் நினைத்த துறையில் சாதிக்க வேண்டும் எனும் வெறி இருக்கும்.

விண்வெளி வீராங்கனை காஜல்

விண்வெளி வீராங்கனை காஜல்

அந்தவகையில், விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய பெண்மணியான கல்பனா சாவ்லாவை போன்று தானும் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பது தான் காஜல் அகர்வாலின் சிறுவயது கனவாக இருந்திருக்கிறது. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை அவரை சினிமா பக்கம் திருப்பி விட்டிருக்கிறது.

விண்வெளி வீராங்கனையாக நடிக்கவேண்டும்

விண்வெளி வீராங்கனையாக நடிக்கவேண்டும்

இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள காஜல் அகர்வால், ஒரு படத்திலாவது விண்வெளி வீராங்கனையாக நடிக்க வேண்டும் என்பது எனது தற்போதைய கனவாக இருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த ஆசையாவது நிறுவேறுமா பார்க்கலாம்.

English summary
Kajal Agarwal's childhood dream is that she wants to be an astronaut like Kalpana Chawla. She said that my current dream is act as an astronaut in a film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil