»   »  'அந்த' இயக்குனர் படத்தில் நடிப்பதை நினைத்தாலே படபடப்பாக இருக்கிறது: காஜல்

'அந்த' இயக்குனர் படத்தில் நடிப்பதை நினைத்தாலே படபடப்பாக இருக்கிறது: காஜல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இயக்குனர் தேஜாவுடன் சேர்ந்து மீண்டும் பணியாற்றுவதை நினைத்தால் படபடப்பாக இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

2007ம் ஆண்டு வெளியான லக்ஷ்மி கல்யாணம் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அவரை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் தேஜா.

டோலிவுட்டில் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது முன்னணி நாயகிகளில் ஒருவராக உள்ளார் காஜல் அகர்வால்.

தேஜா

தேஜா

10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தேஜாவின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் காஜல் அகர்வால். நேனே ராஜு நேனே மந்திரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் ஹீரோ ராணா. படத்தில் கேத்ரீன் தெரஸாவும் உள்ளார்.

படபடப்பு

படபடப்பு

தன்னை டோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த தேஜாவின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாகவும், படபடப்பாகவும் இருப்பதாக காஜல் தெரிவித்துள்ளார்.

அஜீத், விஜய்

அஜீத், விஜய்

காஜல் அகர்வால் தமிழில் அஜீத்துடன் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். மேலும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்திலும் நடிக்கிறார்.

ஹிட்

ஹிட்

சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க நடிகைகள் தயங்கியபோது கைதி எண் 150 படத்தில் துணிச்சலாக நடித்தார் காஜல். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kajal Agarwal is acting in her mentor Teja's movie after a period of ten years. She is excited and nervous at the same time to act in his movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil