»   »  அழகின் மறு பெயர் சத்யஸ்ரீ... அவரின் "காலகட்டம்" இது!

அழகின் மறு பெயர் சத்யஸ்ரீ... அவரின் "காலகட்டம்" இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த் திரையுலகுக்கு இது அழகான நாயகிகள் வரும் கால கட்டம் போல. இதோ இன்னும் ஒரு அழகிய நாயகியின் வருகை.. படத்தின் பெயரும் காலகட்டம்தான்.

பல நட்புக்களைப் பிரித்தது திருமணம் தான் என்பதை எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் சொல்ல வருகிற படம் தான் காலகட்டம் என்கிறார் அதன் இயக்குநர் கே.பாஸ்கர்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் கே.பாஸ்கர். இவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவரின் இயக்கத்தில் தயாராகும் படம் தான் காலகட்டம். இப்படத்தில் இதுவரை வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் பவன் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோவாக கோவிந்த் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

நாயகியாக சத்யஸ்ரீ என்ற புதுமுகம் நடிக்கிறார். இது தவிர ராஜேந்திரன், ஜோடி நம்பர் ஒன் புகழ் ஆனந்தி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். எழில் அரசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மகேந்திரன் இசை அமைக்கிறார்.

ரொம்பக் கஷ்டம்..

ரொம்பக் கஷ்டம்..

தனது காலகட்டம் படம் குறித்து இயக்குநர் கே.பாஸ்கர் கூறுகையில், ‘தொடர்ந்து நட்பாக இருப்பதுதான் உலகிலேயே கஷ்டமான காரியம், மீனவ இளைஞரும், சினிமா நடன கலைஞனும் நட்பாக இருக்கிறார்கள்.

திருமணத்தால் மாற்றம்...

திருமணத்தால் மாற்றம்...

இருவரில் ஒருவருக்கு திருமணம் நடந்ததும். அந்த நட்பு மற்றவர்களால் எப்படி பார்க்கப்படுகிறது. நண்பர்களுக்குள் என்ன மாற்றம் வருகிறது என்பதுதான் கதை.

நட்புக்களைப் பிரித்த திருமணம்...

நட்புக்களைப் பிரித்த திருமணம்...

பல நட்புகளை பிரித்தது திருமணம்தான் என்பதை எந்த ஒளிமறைவும் இல்லாமல் பளிச்சென்று சொல்கிற கதை. நண்பனுக்கும், மனைவிக்கும் இடையில் கிடந்து தவிக்கும் ஒருவனின் நிலையை பாடும் பாடலை கானா பாலா பாடிக் கொடுத்திருக்கிறார். ஆடவும் செய்திருக்கிறார்.

நட்பின் புதிய முகம்...

நட்பின் புதிய முகம்...

பாட்டும், காட்சியும் பிடித்துப்போய் பேசின சம்பளத்தில் பாதி போதும் என்று சொன்னார். அந்த அளவுக்கு அழுத்தமான பாடலாக வந்திருக்கிறது. நட்பின் புதிய முகத்தை காட்டுகிற படமாக இருக்கும்" என்றார்.

English summary
The upcoming Tamil film Kalakattam directed by debut director Bhaskar is taken on the ground of friendship.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil