»   »  மெய் மறந்தேன் கல்யாணி!

மெய் மறந்தேன் கல்யாணி!

Subscribe to Oneindia Tamil

குட்டிப் பொண்ணு கல்யாணி நடித்து ஒரு படம் கூட இன்னும் முழுசாக வெளிவரவில்லை. ஆனால் பாப்பாபாட்டுக்கு அடுத்தடுத்து படங்களில் புக் ஆகி வருகிறார்.

சென்னைப் பட்டனம், எல்லாம் கட்டணம் என பிரபு தேவாவுடன் சுட்டியாட்டம் போட்ட கல்யாணி, அதன் பிறகுஏராளமான டிவி சீரியல்களில் தலை காட்டி விட்டார்.

இப்போது வளர்ந்து வயசுக்கு வந்து விட்டதால் சினிமாவுக்கு ஓடி வந்து விட்டார். முழு நீள நாயகியாகமாறியுள்ள கல்யாணி 3 படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். இந்தப் படங்களின் ஷூட்டிங் நடைபெறுகிறதாஎன்று கூடத் தெரியவில்லை. அந்த அளவுக்கு படு ரகசியமாக இருக்கிறது அப் படங்கள் குறித்த தகவல்கள்.

இந்த நிலையில் கல்யாணியை புதிதாக ஒரு படத்தில் கூப்பிட்டுள்ளனர். மறந்தேன் மெய் மறந்தேன். இது தான்கல்யாணி நடிக்கப் போகும் புதிய படம். படத்தோட கதை என்று பெரிதாக எதுவும் இல்லை. இசை சப்ஜெக்ட்டாம்இது. அதனால் பாட்டையும், ஆட்டத்தையும் படம் முழுக்க போட்டுத் தள்ளி விடுவார்கள் என நம்பலாம்.அப்புறம் கதைக்கு எங்கே இருக்கு இடம்!

கல்யாணி முன்பை விட இப்போது கூடுதல் பளபளப்புடன் இருக்கிறார். உடல் பொலிவை தூக்கிக்காட்டுவதற்காக ஆயுர்வதே மசாஜ் செய்துள்ளாராம் கல்யாணி. அதனால் தான் இந்த கூடுதல் களையாம்.

கல்யாணியுடன் மல்லுக்கட்ட இருப்பவர் மாடலிங்கிலிருந்து சினிமாவுக்கு வந்துள்ள ஹீரோ யோகா. தினா தான்இசையமைக்கிறார். மன்மதராசா டைப்பில் ஒரு குத்துப் பாட்டை ரெடி செய்து வைத்துள்ளாராம். ஆனால் இந்தப்பாட்டுக்கு யாரை ஆட விடுவது என்று இயக்குனர் சிவராமனுக்கு பெரும் குழப்பமாக உள்ளதாம்.

காரணம் கல்யாணிக்கு கச்சிதம் பத்தாதாம்...

Read more about: kalyani in mei maranthen

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil