ஜிலேபி பேபிஸ்...இன்ஸ்டாகிராமை அலற விடும் கமல் மகள்கள்

சென்னை : சமீபத்தில் அமெரிக்க சென்று வந்த கமல்ஹாசனுக்கு, திங்கட்கிழமையன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கமலே ட்வீட் செய்திருந்தார்.

இதனையடுத்து இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கமல் விரைவில் குணமடைய ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கமலை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர். அரசியல் தலைவர்கள் பலரும் கமல் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கமலின் உடல்நிலை குறித்து சோஷியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர்.

குணமடையும் கமல்

குணமடையும் கமல்

கமல் கொரோனாவில் இருந்து நன்றாக குணமடைந்து வருவதாக கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ட்விட்டரில் அப்டேட் வெளியிட்டிருந்தார். இதே தகவலை மருத்துவமனை நிர்வாகமும் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை, அவர் வரும் வரை யார் தொகுத்து வழங்குவார் என பெரிய விவாதமே நடந்து வருகிறது.

தொகுத்து வழங்குவது யார்

தொகுத்து வழங்குவது யார்

ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதி, சிம்பு என பலரின் பெயர்கள் கூறப்பட்டு வந்த நிலையில், கமலே வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் தொகுத்து வழங்குவார் என்று கூட கூறப்பட்டது. ஆனால் கமலை தொந்திரவு செய்ய விரும்பாத விஜய் டிவி, அவருக்கு பதில் ரம்யா கிருஷ்ணனை தொகுத்து வழங்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜிலேபி பேபிஸ்

ஜிலேபி பேபிஸ்

இப்படி பரபரப்பாக போய் கொண்டிருக்கும் சூழலில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், ஜிலேபி பேபிஸ் என்ற கேப்ஷனோடு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஸ்ருதிஹாசன் ஜிலேபி சாப்பிட்டபடி நடனம் ஆட, அக்ஷராவும் கூட சேர்ந்து நடனம் ஆடுகிறார்.

ஆட்டம் போடும் ஸ்ருதி

ஆட்டம் போடும் ஸ்ருதி

அதே போல் ஸ்ருதிஹாசன், தனது காதலர் சாந்தனு மற்றும் தங்கை அக்ஷராவுடன் ஒன்றாக இருக்கும் சில ஃபோட்டோக்களை பதிவிட்டுள்ளார். தங்கை மற்றும் காதலருடன் ஆட்டம் போடும் ஃபோட்டோக்களுடன், தனக்கு மிகவும் பிடித்தமான ஜீவன்கள் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். அக்ஷரா மற்றும் ஸ்ருதியின் இந்த பதிவு செம வைரலாகி வருகின்றன.

Recommended Video

Kamal Hassan -ஐ தொலைபேசி மூலம் அழைத்த Rajinikanth | Kamal Current Health Status
இப்போ இது தேவையா

இப்போ இது தேவையா

இந்த போஸ்ட்களை பார்த்து விட்டு பலரும், கமல் சார் எப்படி இருக்கிறார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதா என பலரும் அக்கறையாக நலம் விசாரித்துள்ளனர். இன்னும் சிலர், அப்பா மருத்துவமனையில் இருக்கும் போது இந்த ஆட்டம் தேவையா. உங்க அப்பா இதெல்லாம் பார்த்தா என்ன நினைப்பார் என கேள்வி கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X