»   »  பல நடிகைகள் என்னைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்: கங்கனா ரனாவத்

பல நடிகைகள் என்னைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்: கங்கனா ரனாவத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகைகளில் பலர் தன்னைப் பார்த்து பொறாமைப்படுவதாக தேசிய விருது பெற்ற இந்தி நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

28 வயதாகும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் 2 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். நாளுக்கு நாள் அவர் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கங்கனாவின் நடிப்பை பற்றி தான் பேசினர்.

இந்நிலையில் பாலிவுட் பற்றி கங்கனா கூறுகையில்,

பொறாமை

பொறாமை

பாலிவுட்டில் உள்ள பல நடிகைகள் என் மீது பொறாமையில் உள்ளனர். அது யார், யார் என்று தற்போது கூற முடியாது. பின்னர் அவர்களின் பெயர்களை தெரிவிக்கிறேன்.

பணம்

பணம்

பணம் நிச்சயம் உதவியாக இருக்கும். நான் பணம் உள்ள சொந்தக் காலில் நிற்கும் நடிகை. நான் சொகுசாக வாழ முடியும். என் குடும்பத்தாருக்கு உதவி செய்வதுடன் எனக்கு பிடித்த விஷயங்களை செய்ய முடியும்.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரப் படங்களில் நடிக்கும் பிரபலங்களை அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் குறை கூறக் கூடாது. நான் அவ்வளவாக விளம்பரப் படங்களில் நடிப்பது இல்லை என்றார் கங்கனா.

சம்பளம்

சம்பளம்

க்வீன் படம் வெற்றி பெற்ற பிறகு கங்கனா தனது சம்பளத்தை 50 சதவீதம் உயர்த்திவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

English summary
National Award-winning actress Kangana Ranuat said that a lot of actresses in Bollywood are jealous of her.Kangana, 28, made her mark with her performance in films like Gangster, Fashion and Once Upon A Time In Mumbai. But her recent releases Queen and Tanu Weds Manu Returns have highlighted her acting prowess.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil