»   »  சல்மானின் 'பாலியல் பலாத்கார' பேச்சு மிகவும் மோசமானது - கங்கனா ரனாவத்

சல்மானின் 'பாலியல் பலாத்கார' பேச்சு மிகவும் மோசமானது - கங்கனா ரனாவத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் சல்மான் கானின் பாலியல் பலாத்கார பேச்சு மிகவும் மோசமானது என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார்.

சுல்தான் படப்பிடிப்பில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல உணர்ந்தேன் என்று நடிகர் சல்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

சல்மானின் இந்த பேச்சுக்கு தேசிய மகளிர் ஆணையம், மகளிர் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த கருத்துக்கு சல்மான் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என அவருக்கு சம்மன் ஒன்றும் அனுப்பப்பட்டிருக்கிறது.

எனினும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க இதுவரை சல்மான் கான் முன்வரவில்லை. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் சல்மான் கருத்து மிகவும் மோசமானது என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் மும்பை பாந்த்ரா நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் கங்கனா கலந்து கொண்டார். விழாவில் செய்தியாளர்கள் சல்மான் சர்ச்சை பேச்சு குறித்து கேட்டனர்.

சல்மான் பேச்சு குறித்து கங்கனா ''இது மிகவும் மோசமான விஷயம். உணர்வற்ற ஒரு சொல்லுக்கு ஒருவரை ஒருவர் காரணம் காட்டி இந்த மாதிரி விஷயங்களை ஊக்குவிக்கக் கூடாது.

இது போன்ற செயல்கள் ஒரு சமூகத்திற்கே அவமானம் விளைவிக்கக் கூடியவை. இதுபோன்ற செயலுக்கு அனைவருமே சேர்ந்து வருந்த வேண்டும்'' என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

English summary
Kangana Ranaut also reacted to Salman Khan's rape comment and strongly condemns the statement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil