»   »  ரூ.2 கோடி கொடுத்தும் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த கங்கனா ரனாவத்

ரூ.2 கோடி கொடுத்தும் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க மறுத்த கங்கனா ரனாவத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் தர ஒரு முன்னணி நிறுவனம் முன்வந்தும் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடித் தேடி நடிப்பவர்கள் வித்யா பாலன், கங்கனா ரனாவத். 28 வயதில் இரண்டு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார் கங்கனா. அவர் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அவர் படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

சிவப்பழகு கிரீம்

சிவப்பழகு கிரீம்

சிவத்த பொண்ணான கங்கனா ரனாவத்தை சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடிக்குமாறு முன்னணி நிறுவனம் ஒன்று கேட்டுள்ளது. விளம்பரத்தில் நடிக்க அந்நிறுவனம் கங்கனாவுக்கு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளது.

கங்கனா

கங்கனா

ரூ.2 கோடி என்ன, எத்தனை கோடி கொடுத்தாலும் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடித்து சிவப்பு தான் அழகு என்று மக்களை ஏமாற்ற மாட்டேன் என கங்கனா தெரிவித்துவிட்டார்.

மாநிறம்

மாநிறம்

என் சகோதரி ரங்கோலி மாநிறமானவர். ஆனால் அழகானவர். இந்நிலையில் நான் சிவப்பழகு கிரீம் விளம்பரத்தில் நடித்தால் என் சகோதரியை நான் அவமதித்துவிட்டதாக ஆகிவிடும் என்றார் கங்கனா.

தனு வெட்ஸ் மனு

தனு வெட்ஸ் மனு

மாதவன், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 38 கோடி வசூல் செய்துள்ளது. படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கங்கனாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

டர்ட்டி பிக்சர்

டர்ட்டி பிக்சர்

தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை விட்டுவிட்டு தனு வெட்ஸ் மனு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதற்காக என்னை பலர் முட்டாள் என்றனர். ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்று கங்கனா கூறினார்.

English summary
Kangana Ranaut has refused to act in a fairness cream advertisment even after she was offered a whooping Rs. 2 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil