»   »  கர்ப்பம்: முடியை பிச்சுக்கிட்ட பாலிவுட், உண்மையை போட்டுடைத்த நடிகை கரீனா

கர்ப்பம்: முடியை பிச்சுக்கிட்ட பாலிவுட், உண்மையை போட்டுடைத்த நடிகை கரீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது கணவரும், நடிகருமான சயிப் அலி கானுடன் அண்மையில் லண்டனுக்கு சென்று வந்தார். அதில் இருந்து அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி மேல் செய்தி வெளியாகி வருகிறது.

Kareena Kapoor on pregnancy: Watch what she said

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கரீனா சுடிதார் அணிந்து துப்பட்டாவை வைத்து வயிற்றை மறைத்துக் கொண்டே இருந்தார். கரீனா கண்டிப்பாக கர்ப்பமாக உள்ளார், அதனால் தான் வயிற்றை மறைக்கிறார் என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டனர்.

என்ன கரீனா, ஆளாளுக்கு நீங்கள் கர்ப்பம் என்கிறார்கள். உண்மை தான் என்னவென்று சொல்லிவிடுகங்களேன் என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,

கடவுள் நாடினால் நடக்கட்டும். நான் ஒரு பெண். ஆனால் தற்போது கர்ப்பம் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் எல்லாம் என்னைப் பற்றி பேசுவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. லண்டனில் என் 5 குழந்தைகளை மறைத்து வைத்துள்ளேன் என்றார்.

English summary
Bollywood actress Kareena Kapoor has put an end to pregnancy rumours. She said that, "God willing hopefully. I am a woman. But right now there is nothing to say about it."
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil