»   »  ஒரு பாட்டுக்காக 32 கிலோ எடை உள்ள ஆடை அணிந்து ஆடிய கரீனா கபூர்

ஒரு பாட்டுக்காக 32 கிலோ எடை உள்ள ஆடை அணிந்து ஆடிய கரீனா கபூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆர். பால்கியின் கி அன்ட் கா படத்தில் ஒரு பாடலில் கரீனா கபூர் 32 கிலோ எடையுள்ள ஆடையை அணிந்து ஆடியுள்ளாராம்.

சீனி கம், பா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர். பால்கி தற்போது கி அன்ட் கா என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்தில் அர்ஜுன் கபூர் ஹீரோவாகவும், கரீனா கபூர் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.

Kareena Kapoor wears 32 kg lehenga for ‘Ki and Ka’ song

கரீனா மீது தனக்கு கிரஷ் இருந்ததாக அர்ஜுன் கபூர் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். படத்தில் வரும் ஒரு பாடலை மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கியுள்ளனர்.

அந்த பாடல் காட்சியில் கரீனா கபூர் 32 கிலோ எடையுள்ள லெஹங்கா அணிந்து ஆடியுள்ளார். லெஹங்காவை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது,

கொளுத்தும் வெயலில் கரீனா 30 கிலோ எடையுள்ள லெஹங்கா அணிந்து இரண்டு நாட்களாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். எடை அதிகமுள்ள ஆடை அணிந்தும் அவர் அது பற்றி குறை கூறாமல் அமைதியாக இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Bollywood actress Kareena Kapoor has worn a 32 kg lehenga for a song in R. Balki's upcoming movie Ki and Ka.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil