»   »  மெழுகுச் சிலை அழகா இல்லை கத்ரீனா கைப் அழகா?: நீங்களே சொல்லுங்க!

மெழுகுச் சிலை அழகா இல்லை கத்ரீனா கைப் அழகா?: நீங்களே சொல்லுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாலிவுட் நடிகை கத்ரீனா கைபின் மெழுகுச் சிலை லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. இந்நிலையில் பாலிவுட் நடிகைககளில் கத்ரீனா கைப், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகிய மூவரில் யாருக்கு மெழுகுச் சிலை வைக்கலாம் என்று மேடம் டுசாட்ஸ் இணையதளம் மூலம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த வாக்கெடுப்பில் கத்ரீனா கைபுக்கு சிலை வைக்கவே பலரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர்.

கத்ரீனா கைப்

கத்ரீனா கைப்

கத்ரீனா கைப் நடனமாடும் போஸில் இருக்கும் மெழுகுச் சிலை செய்யப்பட்டு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

சிலை

சிலை

தன்னுடையை மெழுகுச் சிலையை கத்ரீனா கைப் கடந்த 28ம் தேதி திறந்து வைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

சல்மான்

சல்மான்

என்னை விட பெரிய நட்சத்திரமாகிவிட்டீர்கள் என்று கத்ரீனா கைபுக்கு அவரின் முன்னாள் காதலரான சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

மெழுகுச் சிலையை விட கத்ரீனா கைப் தான் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Bollywood actress Katrina Kaif has unveiled her wax statue in Madame Tussauds museum in London.
Please Wait while comments are loading...