»   »  ஃபேஸ்புக், ட்விட்டரில் தீயாக பரவும் காவ்யா- நஸ்ரியா செல்ஃபி

ஃபேஸ்புக், ட்விட்டரில் தீயாக பரவும் காவ்யா- நஸ்ரியா செல்ஃபி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள ஹீரோயின் காவ்யா மாதவன் நஸ்ரியாவுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபியை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அந்த செல்ஃபி தீயாக பரவியுள்ளது.

மலையாள திரையுலகில் தனக்கு தோழிகள், தோழர்கள் அவ்வளவாக இல்லை என்று கூறி வருபவர் நடிகை காவ்யா மாதவன். இந்நிலையில் அவருக்கு நஸ்ரியாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. நஸ்ரியா காவ்யாவை தனது அக்கா போன்று பார்க்கிறார்.

Kavya Madhavan And Nazriya Nazim's Lovely Selfie Goes Viral!

திரையுலகிலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி நஸ்ரியா காவ்யாவின் பக்கம் தான். நஸ்ரியா தனது திருமணத்தின்போது நடந்த மெஹந்தி நிகழ்ச்சி உள்ளிட்ட குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கு காவ்யா மாதவனை அழைத்திருந்தார்.

நஸ்ரியா காவ்யாவின் குடும்பத்தாருக்கும் நெருக்கம். இந்நிலையில் காவ்யா நஸ்ரியாவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை வெளியிட்டுள்ளார். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிக்காவிட்டாலும் அவரது புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலாகவே உள்ளனர்.

English summary
Malayalam actress Kavya Madhavan has posted a lovely selfie with Nazriya and the pic has already become viral in social networking sites.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil