»   »  மணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேம்ப்பா: அடம்பிடித்த பார்த்திபன் மகள்

மணிரத்னம் படத்தில் நடிக்க மாட்டேம்ப்பா: அடம்பிடித்த பார்த்திபன் மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மகள் கீர்த்தனா மணிரத்னத்தின் இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தும் ஏற்க மறுத்ததாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் மகள் கீர்த்தனா இயக்குனர் மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார் கீர்த்தனா.

மணிரத்னம்

மணிரத்னம்

கீர்த்தனா தற்போது வளர்ந்து குமரியாகிவிட்டார். இந்நிலையில் மணிரத்னம் அவரை தனது 2 படங்களில் ஹீரோயினாக்க முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளார். இந்த தகவலை பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

கீர்த்தனா

கீர்த்தனா

மணிரத்னத்தின் எந்தெந்த படங்களை கீர்த்தனா நிராகரித்தார் என்பதை பார்த்திபன் தெரிவிக்கவில்லை. மணியின் படத்தை கீர்த்தனா நிராகரித்ததற்கு முக்கிய காரணம் உள்ளது.

இயக்கம்

இயக்கம்

கீர்த்தனாவுக்கு மணியின் படத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். மணிரத்னமாக ஆக வேண்டும் என்பதே அவரது ஆசையாம். அதாவது இயக்குனர் ஆவதே கீர்த்தனாவின் நோக்கம்.

காற்று வெளியிடை

காற்று வெளியிடை

மணியின் படங்களில் ஹீரோயினாகியிருக்க வேண்டியவர் தற்போது அவரின் காற்று வெளியிடை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Parthiban said that his daughter refused to act as heroine in two of Mani Ratnam's movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil