»   »  ஒரு டஜன் கீர்த்தி!

ஒரு டஜன் கீர்த்தி!

Subscribe to Oneindia Tamil

இன்னிய தேதிக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் ஒரே நாயகி கீர்த்தி சாவ்லாதான்.

ஆசின், திரிஷா, நயனதாரா என முன்னணி நட்சத்திர வரிசை பெரிதாக இருந்தாலும் கூட அதிக படங்களில் நடிப்பவர்கள் யார் என்றால் இவர்களில் யாரும் அந்த வரிசையில் வர மாட்டார்கள்.

திரிஷாவிடம் இரு படம் மட்டுமே கையில் இருக்கிறது. ஆசின் இந்திக்குப் போயே போயாச்சு. நயனதாராவிடம் அஜீத், தனுஷ் படங்கள் மட்டுமே உள்ளன.

இந்த நிலையில் முன்னணி ஸ்டார் வரிசையில் இடம் பெறாத கீர்த்தி சாவ்லா கை நிறைய படங்களுடன் படு ஜாலியாக நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கீர்த்தி சாவ்லா ஆரம்பத்தில் படு நிதானமாகத்தான் ஆரம்பித்தார். ஆனால் இப்போது அவர் போகிற வேகம் அசுரமாக இருக்கிறதாம். விரைவில் அவர் லீடிங் ஸ்டாராகி விடுவார் என கோலிவுட் நாடி தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மருதமலை, சூர்யா, பிறகு, செம்புலி, இன்பா, நாயகன் என கிட்டத்தட்ட 12 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம் கீர்த்தி. இவ்வளவு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கிறாரே, கால்ஷீட் பிரச்சினை வராதா என்ற சந்தேகம் வருவது இயல்புதான்.

ஆனால் முட்டாமல், மோதாமல் அத்தனை பேருக்கும் தேதிகளைப் பிய்த்துக் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறாராம். கிளாமர் காட்ட தயங்காதது, விட்டுக் கொடுப்பது, அட்ஜெஸ்ட் செய்வது என்று எல்லாவகையிலும், கீர்த்தி படு கேஷுவலாக இருப்பதால்தான் இத்தனை படங்கள் கையில் நிற்கிறதாம்.

கீர்த்தி, படு நேர்த்திதான்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil