»   »  சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த கீர்த்தி

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த கீர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி முருகனில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ், பாக்யராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ரஜினி முருகன். இந்த படத்தின் டீசர், டிரெய்லர் என வெளியானலும் சில சிக்கல்களினால் படம் வெளியாகாமல் உள்ளது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர் டி ராஜா தயாரிக்கும் புதிய படத்தை பாக்கியராஜ் கண்ணன் என்பவர் இயக்குகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் ஜோடி யார்?

படத்தின் ஜோடி யார்?

சிவகார்த்திகேயன், நடிக்கும் இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

விலகிய ஸ்ருதிஹாசன்

விலகிய ஸ்ருதிஹாசன்

சம்பள பேச்சுவார்த்தை முடிந்து, படப்பிடிப்புக்கான தேதிகள் பேச்சுவார்த்தை மற்றும் நடைபெற்று வந்த நிலையில், தான் நடித்து வரும் 5 படங்களுக்கு இடையே இப்படத்தில் நடிக்க முடியாது என்பதால் ஸ்ருதிஹாசன் விலகியதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் ஜோடி

கீர்த்தி சுரேஷ் ஜோடி

தற்போது சிவகார்த்திகேயனுக்கு ரஜினி முருகன் பட ஜோடியான கீர்த்தி சுரேஷை மீண்டும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். நவம்பர் 2ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

ஹீரோயின் சென்டிமென்ட்

ஹீரோயின் சென்டிமென்ட்

சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா, காக்கிச்சட்டை படத்தில் இரண்டவதாக நடித்தார். இப்போது ரஜினி முருகனில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் இரண்டாவதாக ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Young Malayalam actress Keerthy Suresh has been finalized as the heroine for Sivakarthikeyan next movie. Baakiyaraj Kannan will be directing this movie. Shooting of the movie will begin on November 02, 2015.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil