ஹய்யா ஜாலி ஜாலி.. ஏன் இப்படித் துள்ளிக் குதிக்கிறார் கீர்த்தி சுரேஷ்??
சென்னை: விஜய் சாருடன் இணைந்து நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.
தமிழில் இது என்ன மாயம் படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ்க்கு சமீபத்தில் வெளியான ரஜினிமுருகன் படம் மிகப்பெரிய ஹிட்டை அளித்திருக்கிறது.

தற்போது கீர்த்தியின் மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகரிக்கும் விதத்தில் விஜய் 60 படத்தில் இளைய தளபதியுடன் ஜோடி போடும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைத்துள்ளது.
நடித்து 2 படங்கள் மட்டும் வெளியான நிலையில் விஜய் பட வாய்ப்பு கீர்த்திக்குக் கிடைத்திருப்பது அனைவரின் மனத்திலும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் "விஜய் 60 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

விஜய் சாருடன் இணைந்து நடிக்கப் போவதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. படம் தொடங்கும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

கீர்த்தி தற்போது தனுஷின் மிரட்டு, பாபி சிம்ஹாவின் பாம்பு சட்டை மற்றும் சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











