அந்த கோலத்தில் நடிச்ச ஆண்ட்ரியா படமே வரல.. மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா?

சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து கீர்த்தி சுரேஷ் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ரிவால்வர் ரீட்டா திரைப்படம் இன்று வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், சில பல காரணங்களுக்காக இந்த மாதம் படம் வெளியாகவில்லை. எப்போது ரிலீஸ் என்கிற தகவல்களும் தெரியவில்லை.

தளபதி விஜய்யின் அட்மினான ஜெகதீஷ் ப்ளிஸ் தயாரிப்பாளராக மாறி தி ரூட் நிறுவனத்தை தொடங்கிய நிலையில், அதில் தான் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ரகு தாத்தா டீசர், டிரைலர் எல்லாம் வரும் போதெல்லாம் இருந்த வரவேற்பு அந்த படம் வெளியானதும் கீர்த்தி சுரேஷ் பக்கம் கொஞ்சம் கூட செல்லவில்லையாம்.

Keerthy Suresh will soon join with Mysskin next movie buz trending
Photo Credit:

திருமணத்துக்குப் பிறகு முன்னணி நடிகர்கள் நயன்தாராவை ஒதுக்கியதை போலவே கீர்த்தி சுரேஷையும் ஒதுக்கிய நிலையில், அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

ஆண்ட்ரியாவே கடுப்பாகிட்டாரு: மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடித்த பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அந்த காட்சிகளை எல்லாம் மிஷ்கின் நீக்கியதாக கூறியது மீண்டும் அந்த படத்தின் மீது அதிர்வலைகளை உருவாக்கியது. ஆனால், அந்த படம் அப்படியே வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில், சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா என்னால படத்தில் நடிக்கத்தான் முடியும், நான் என்ன ரிலீசா பண்ண முடியும் என புலம்பித் தள்ளிவிட்டார்.

Keerthy Suresh will soon join with Mysskin next movie buz trending
Photo Credit:

மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ்?: ஆண்ட்ரியாவை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் படமும் இன்னமும் விற்பனையாகாமல் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் வரை சென்றாலும் தொடர்ந்து தோல்விப் படங்களை கொடுத்து வரும் கீர்த்தி சுரேஷ் மிஷ்கின் உடன் இணையப் போகிறார் என்கிற பேச்சுக்கள் பெரிதாக எந்தவொரு அதிர்வலையையும் ஏற்படுத்தவில்லை என்பது தான் வேதனையான ஒன்றாக மாறியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் நடிகராக சில படங்களில் அசத்தி வரும் நிலையில், சின்னத்திரை ரியாலிட்டி ஷோவிலும் நடுவராக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X