»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கிரணுக்கு தனது சொந்த ஊரான மும்பைக்கு பிளேன் ஏறிவிட்டாராம்.

ஏற்கனவே கிழ நடிகர்களோடு ஜோடி சேர்ந்ததாலும் இளவட்ட நடிகர்களால் ஒதுக்கப்பட்டிருந்தார் கிரண்.

இந் நிலையில் விஜய்காந்தோடு நடித்த தென்னவன் படம் படு தோல்வி அடைந்தது. இந்த அதிர்ச்சியைத்தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த திவானும் தோல்வியைத் தழுவ, மூத்தவர்களாலும் ஒதுக்கப்பட்டுவிட்டார்கிரண்.

பலன், கையில் ஒரு படமும் இல்லை.

இயக்குனர் சூர்யாவோடு நடித்த நியூ படத்திலும் கிரணின் போர்ஷன் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.

இந் நிலையில் ஜோதிகாவோடு மோதல் ஏற்பட, கிரணின் கால்ஷீட்டையும் பார்த்து வந்த ஜோதிகாவின்மேனேஜரும் கழன்று கொண்டுவிட்டார். கிரணுக்கு வரவிருந்த சிங்கிள் டான்ஸ் வாய்ப்புகளையும் அவர் இடையில்புகுந்து தடுத்துவிட்டார்.

இதனால் சென்னையில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் தனக்கு வெட்டிச் செலவு என்பதை உணர்ந்துகொண்டுவிட்ட கிரண், மும்பைக்கு ஓடிவிட்டார்.

அங்கிருந்த வண்ணமே விந்தியாவின் மேனேஜரை தனது கால்ஷீட்டையும் பார்க்க வைக்கும் முயற்சியில்இறங்கியுள்ளார்.

ஆனால், இவர் கேட்கும் ஊதியத்தைப் பார்த்தால் யாரும் இனிமேல் சான்ஸ் தருவார்களா என்று தெரியவில்லை.திவான் படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ரூ. 50 லட்சம் வரை பேரம் பேசினார் என்கிறார்கள்.மேலும் மும்யிைல்கிரணுக்கு ஒரு புதிய காதலர் சிக்கிவிட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

ஆக, இனி ஏதாவது பட சான்ஸ் கிடைத்தால் மட்டுமே கிரணை கோடம்பாக்கத்தில் பார்க்க முடியும்.

சமீப காலத்தில் மிக பரபரப்பாக அறிமுகமாகி, வேகமாய் மேலே போய், அதே வேகத்தில் கீழே விழுந்து, ஊருக்கேஓடிப் போன நடிகைகளில் இரண்டாவது நபர் கிரண்.

முதலாமானவர் துள்ளுவதே இளமை ஷெரீன்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil