»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கைவசம் படம் எதுவும் இல்லாவிட்டாலும் கிரணின் பந்தா மட்டும் குறையவே இல்லை.

கிரண் நடித்து ஹிட்டான ஒரே படம் ஜெமினி. அந்தப் படத்தில்தான் அவர் அறிமுகமானார். பாடல்கள் பட்டையைக்கிளப்பியதால் படம் ஓஹோவென ஓடியது. அப்போது கிரண் மீது கொஞ்சம் வெளிச்சம் விழுந்ததில் வரிசையாக 4,5 படங்கள் செய்தார்.

கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவதற்குப் பதில் உடல் எடையில் ஒரு ரவுண்டு வந்ததால் மார்க்கெட் சுத்தமாகக்குறைந்து, கிரண் பீல்டு அவுட்டானார். எடையைக் குறைத்தால்தான் தேற முடியும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டதால், மும்பை சென்று அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார்.

கடுமையான உடற்பயிற்சி, கொலஸ்டிரால் உணவுகளில் தீண்டாமை ஆகியவற்றைக் கடைபிடித்தார். இதனால்உடல் சுற்றளவில் கணிசமாக பல இன்ச்களைக் குறைத்தார்.

இனி கோடம்பாக்கம் போய் வாய்ப்புவேட்டையாடலாம் என்று சென்னை வந்து, ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டார்.

வாய்ப்பு கேட்டு, இயக்குனர்களைச் சந்தித்தபோது அவர்கள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. பலருக்குஅடையாளமே தெரியவில்லை. காரணம் என்னவென்றால், உடம்பைக் குறைக்கிறேன் பேர்வழி என்று காற்றுஇறங்கிய பலூன் போல கிரண் ஆகி விட்டதுதான்.

இவரைக் கதாநாயகியாகப் போட்டால் ரசிகர்கள் நம் தலையில் துண்டைப் போட்டு விடுவார்கள் என்றுஇயக்குனர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். இப்போது நட்சத்திர ஹோட்டலின் ரூம் வாடகையைக்கட்டுவதற்குக் கூட கையில் காசில்லாமல் தவிக்கிறார் கிரண்.

ஆனாலும் பந்தா மட்டும் குறையவே இல்லை. சும்மா இருக்கிறாரே, செகண்ட் ஹீரோயின் சான்ஸ் கொடுக்கலாம்என்று யாராவது போனால், 20 லட்சம் கேட்டு அலற வைக்கிறாராம்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil