For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பில்டிங்கை தாங்கி பிடிக்கும் தேவதையே உன்னை தாங்கி பிடிக்க நான் வரலாமா.. குந்தவையும் பைசா கோபுரமும்!

  |

  சென்னை: சோழ நாட்டில் இருந்து இத்தாலிக்கு பயணம் புறப்பட்டுள்ளார் குந்தவை என ஆரம்பித்து, ஏகப்பட்ட க்யூட் கமெண்ட்டுகளை நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு போட்டுத் தாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

  பொன்னியின் செல்வன் 500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், மொத்த படக்குழுவும் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று விட்டது.

  இந்நிலையில், விடுமுறையை கொண்டாட இத்தாலிக்கு டூர் அடித்துள்ள த்ரிஷா அங்கே எடுத்த புகைப்படத்தை பக்காவான கேப்ஷன் கொடுத்து வெளியிட்டுள்ளார்.

  ஏஆர் ரஹ்மான் தோள்களில் சாய்ந்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா: இருந்தாலும் இவ்வளவு வெட்கம் கூடாது பாஸ்!ஏஆர் ரஹ்மான் தோள்களில் சாய்ந்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா: இருந்தாலும் இவ்வளவு வெட்கம் கூடாது பாஸ்!

  குந்தவையாக அசத்தல்

  குந்தவையாக அசத்தல்

  மெளனம் பேசியதே படத்தில் சிரித்து சிரித்துப் பேசி சூர்யாவை பித்துப் பிடித்து அலைய விட்ட த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் தம்பி கார்த்திக்கு ஜோடியாக குந்தவை பிராட்டியாக அங்கே போ.. இங்கே போ.. என ஆர்டர் போட்டு அனுப்பி வருகிறார். முதல் நாள் பார்த்த வனப்பு சற்று குறையவும் இல்லை உனக்கு என பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் வரிகளை த்ரிஷாவை நோக்கி பாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

  இத்தாலி டூர்

  இத்தாலி டூர்

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தில் மீண்டும் இணைந்து நடித்த த்ரிஷா குந்தவையாக அசத்தி உள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி பாக்ஸ் ஆபிஸை நெருங்கி வரும் நிலையில், அந்த வெற்றி சந்தோஷத்தை இத்தாலியில் ஜாலியாக கொண்டாடி வருகிறார்.

  பைசா பக்கத்தில் த்ரிஷா

  பைசா பக்கத்தில் த்ரிஷா

  இத்தாலிக்கு டூர் சென்ற த்ரிஷா அங்கே உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பைசா கோபுரத்தை விசிட் செய்துள்ளார். பைசா கோபுரத்தையே தாங்கிப் பிடிப்பது போல செம க்யூட்டாக நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

  மனித தவறு

  மனித தவறு

  மனிதனின் தவறும் அதிசயமாக மாறும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக சாய்ந்தபடி நிற்கிறது இந்த பைசா கோபுரம் என த்ரிஷா அந்த போட்டோவுக்கு பக்காவான கேப்ஷன் கொடுக்க அதை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? த்ரிஷாவை வர்ணித்து ஏகப்பட்ட க்யூட்டான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

  வந்தியத்தேவன் மீம்

  வந்தியத்தேவன் மீம்

  இப்போதெல்லாம் பெண்கள் அழகான போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டால் உடனடியாக வந்து விழும் வந்தியத்தேவனின் இந்த போட்டோ மீமை அதற்கு உரித்தான குந்தவை தேவி போட்டோ போடும் போது வராதா என்ன என்பது போல நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ள கமெண்ட் ரசிகர்களை கவர்ந்துள்ளது. "அந்த மனிதப் பிழையை தாங்கி நிற்கும் அற்பதமே நீங்கள் தான் தேவி!" என ஒரேயடியாக வர்ணித்து தள்ளி இருக்கிறார்.

  பில்டிங்கை தாங்கிப் பிடிக்கும் தேவதையே

  பில்டிங்கை தாங்கிப் பிடிக்கும் தேவதையே

  "பில்டிங்கை தாங்கி பிடிக்கும் தேவதையே . உன்னை தாங்கி பிடிக்க நான் வரலாமா.." என வடிவேலு போட்டோ போட்டு இந்த ரசிகர் போட்டுள்ள கமெண்ட் ஏகப்பட்ட ரசிகர்களை பார்த்த மாத்திரத்திலேயே சிரிக்க வைத்து விடுகிறது. என்னவொரு ஃபீலிங்ப்பா உனக்கு என கேட்டு வருகின்றனர்.

  இதயத்திருடி

  இதயத்திருடி

  இதயத்திருடியை போய் இளைய பிராட்டின்னு நினைச்சிட்டு இருக்கானுங்க என கேஜிஎஃப் மீம் எல்லாம் போட்டு ரசிகர்கள் வேறலெவலில் த்ரிஷாவின் இந்த பைசா கோபுர போட்டோவை ரசித்து வருகின்றனர்.

  தளபதி 67 அப்டேட் வரட்டும்

  தளபதி 67 அப்டேட் வரட்டும்

  லோகேஷ் கனகராஜ் வெறித்தனமாக தளபதி 67 அப்டேட் விடுவதற்கு ரெடியாகி வருகிறார். விஜய்க்கு ஜோடி த்ரிஷா என்பதை மட்டும் அவர் கன்ஃபார்ம் பண்ணட்டும் அப்புறம் இந்த குந்தவையை எப்படி கொஞ்சுறோம்னு மட்டும் பாருங்க என விஜய் ரசிகர்களும் வெறித்தனமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

  English summary
  Kundavai Trisha posing near Pisa tower and shares a cute photo in her social handles and gets likes and funny comments from fans. Ponniyin Selvan gives a massive hit to Trisha this year. Next Year also Ponniyin Selvan 2 in her kitty and she expected to be onboard for Thalapathy 67.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X