»   »  மலேசியாவுக்குப் பறக்கும் 'குருவி'

மலேசியாவுக்குப் பறக்கும் 'குருவி'

Subscribe to Oneindia Tamil
Trisha
விஜய், திரிஷா இணைந்து கலக்கும் குருவி பட யூனிட் அடுத்த வாரம் மலேசியாவுக்குப் பறக்கிறது. அட்டகாசமான ஒரு பாட்டை, யாரும் இதுவரை போயிராத லொகேஷன்களில் சுடச் சுட சுட்டு வரப் போகிறார்களாம்.

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் முதல் படம் குருவி. தரணி இயக்குகிறார். விஜய் நாயகனாக நடிக்க, ஜோடி சேருகிறார் திரிஷா.

கில்லிக்குப் பிறகு தரணி, விஜய், திரிஷா இணையும் இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியின் முதல் தயாரிப்பு என்பதால்.

தீபாவளிக்கு வந்த அழகிய தமிழ் மகன் பிளாப் ஆகி விட்டதால் குருவியை ஹிட் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார். தரணியும் ஹிட் கொடுத்து நாளாகி விட்டது. அதேபோல திரிஷாவுக்கும் பீல்டில் போட்டிகள் அதிகமாகி விட்டன.

எனவே இந்த மூன்று பேருக்குமே இப்படத்தை ஹிட் ஆக்க வேண்டிய கட்டாயம். எனவே தங்களது முழுத் திறமைகளையும் படத்தில் காட்டவுள்ளனர்.

அடுத்த வாரம் ஒரு பாடலை ஷூட் செய்வதற்காக குருவி யூனிட் மலேசியாவுக்குப் பறக்கிறது. இதுவரை யாரும் போயிராத பல அருமையான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாம்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தையும் மலேசியாவிலேயே முடித்துக் கொண்டு பின்னர் ஊர் திரும்பக் கூடும் என்கிறார்கள்.

Please Wait while comments are loading...