»   »  ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி

ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சங்கமித்ரா படத்திற்காக ஸ்ருதி ஹாஸன் லண்டனில் வாள் சண்டை கற்றுக் கொண்டிருக்கிறார்.

பரபரப்பாக நடித்து வந்த ஸ்ருதியின் கையில் தற்போது புதிய படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் தான் அவர் சுந்தர் சி.யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இளவரசியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

படத்தில் அவர் வாள் சண்டை போடும் காட்சிகள் உள்ளன.

லண்டன்

லண்டன்

சண்டை காட்சிகள் குறித்து அறிந்த ஸ்ருதி சூட்கேஸை எடுத்துக் கொண்டு லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வாள் சண்டை கற்று வருகிறார்.

சூப்பர்

புதிய கலையை கற்றுக் கொள்ள கிடைத்த வாய்ப்பை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். வாள் சண்டை கற்பது புதிய அனுபவமாக உள்ளது. மன ரீதியாக மகிழ்ச்சியாகவும், த்ரில்லாகவும் உள்ளது என ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

 ஆர்யா, ரவி

ஆர்யா, ரவி

சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி ஹாஸன் இளவரசி சங்கமித்ராவாக நடிக்கிறார். இந்த படத்தில் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் உள்ளனர். படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி ஆகும்.

 விஜய், சூர்யா

விஜய், சூர்யா

சங்கமித்ரா படத்தில் நடிக்க சுந்தர் சி. முதலில் விஜய், சூர்யா ஆகியோரை கேட்க அவர்களோ மெகா பட்ஜெட் படம் வம்பு எதற்கு என்று ஒதுங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Shruti Haasan says learning sword fighting for the upcoming historical drama 'Sanghamitra' was mentally engaging and exhilarating. Shruti essays the role of a warrior princess in filmmaker Sundar C's mega budget tri-lingual drama.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil