Lokah Day 4 Box Office: லோகா 4வது நாள் வசூல்.. கல்யாணி பிரியதர்ஷன் பட்ட கஷ்டமெல்லாம் வீண் போகல!

திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் மற்றும் சாண்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம் மலையாளத் திரையுலகை தாண்டி உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது.

துல்கர் சல்மான் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வெற்றிப் பெற்றூ வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதிலும் வெற்றிக் கண்டுவிட்டார். ஹீரோயினை நம்பி 30 கோடி பட்ஜெட்டில் இப்படியொரு தரமான படத்தைக் கொடுத்தால் போட்ட பணம் மீண்டும் வருமா? என்கிற டவுட்டு பல தயாரிப்பாளர்களுக்கும் எழத்தான் செய்யும்.

Lokah Day 4 Box Office Collection Reports are in Tamil Kalyani Priyadarshan beats Mohanlal Globally
Photo Credit:

ஆனால், கதை மற்றும் இயக்குநரை நம்பி துல்கர் சல்மான் போட்ட பணம் வீணாகவில்லை என 4 நாட்களில் டபுளாக வசூல் குவிந்துள்ளது என மலையாள சினிமாவே சந்தோஷத்தில் உள்ளனர். லோகா படத்தை மலையாளப் படம் என்று லிமிட் செய்யாமல் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களை உலகம் முழுவதும் ரசிகர்கள் பார்ப்பது போல இந்த படத்தையும் இந்தியா முழுவதும் இந்தியாவை தாண்டி ஓவர்சீஸில் உள்ள மலையாளிகள் மற்றும் தமிழர்கள் என பலரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தவிக்கும் டாப் நடிகைகள்: நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏகப்பட்ட முன்னணி நடிகைகள் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால், மிகப்பெரிய வெற்றியை பெறவும் லாபகரமாக போட்ட காசை எடுக்கவுமே பலரும் போராடி வருகின்றனர். இந்நிலையில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லோகா படத்துக்காக பட்ட கஷ்டமெல்லாம் வீண் போகாமல் இயக்குநரின் புத்திசாலித்தனத்தால் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறி மலையாள திரையுலகத்துக்கும் நன்மை சேர்த்துள்ளது இந்த லோகா.

லோகா 4 நாள் வசூல்: இந்தியாவில் லோகா திரைப்படம் முதல் நாளில் வெறும் 2.7 கோடி ரூபாய் வசூலில் தொடங்கிய நிலையில், 2வது நாளில் மவுத் டாக் மூலமாக 4 கோடி வசூலை ஈட்டியது. 3வது நாளான சனிக்கிழமை அப்படியே டபுளாகி 7.6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. 4வது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 9.75 கோடி ரூபாய் வசூலை அள்ளி ஓணம் வின்னராகவே மாறியுள்ளது. 24.05 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் லோகா எடுத்துள்ளதாக சாக்னிக் வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது.

60 கோடி வசூல்: ஓவர்சீஸிலும் லோகா படத்துக்கு மிகப்பெரிய டிமாண்ட் எழுந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 4 நாட்களில் 60 கோடி ரூபாய் வசூலை உலகளவில் லோகா திரைப்படம் அள்ளியிருப்பதாக மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.

மோகன்லாலை மிஞ்சிட்டாரு: மோகன்லால் நடித்த ஹிருதயப்பூர்வம் படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால், அந்த படம் 4 நாட்களில் உலகளவில் 34 கோடி வசூல் ஈட்டியுள்ளதாகவும் லோகா படம் மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் படத்தை மிகப்பெரிய மார்ஜினில் முந்தியிருப்பதாக கூறுகின்றனர். பான் இந்தியா அளவில் இந்த படத்துக்கு முன்பே ப்ரோமோஷன் செய்திருந்தால் இந்நேரம் 100 கோடி வசூலை கடந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இந்த படம் 150 முதல் 200 கோடி வசூல் வரை ஈட்டும் என்றும் மலையாள திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர். மோகன்லாலின் எம்புரான் பட வசூலை முந்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X