மத கஜ ராஜா கொடுத்த மாஸ் வெற்றி.. மீண்டும் அஞ்சலியை கமிட் செய்த விஷால்.. வாழ்வுதான்!
சென்னை: விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வெளியிடப் போவதாக அறிவித்து சில ஆண்டுகள் ஆகியும் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கைகள் எல்லாம் நடுங்குவதாக ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வெடித்தன. ஆனால், அவர் கூலாக தன்ஷிகாவுடன் தனது திருமணத்தையே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்து விஷால் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகு தனது 34வது படத்தில் நடிக்கப்போகும் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னதாக வெளியாகின. அந்த பட்த்தில் தற்போது நடிகை அஞ்சலி இணைந்துள்ள அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை அஞ்சலி தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு அவருக்கு மிகப்பெரிய ஆண்டாகவே அமைந்துள்ளது.
கேம் சேஞ்சர் முதல் பறந்து போ வரை: அங்காடித் தெரு, கற்றது தமிழ் படங்களின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களின் மனதில் தனக்கான ஒரு தனி இடத்தை நடிகை அஞ்சலி இன்னமு பிடித்து வைத்திருக்கிறார். கவர்ச்சி நடிகையாகவும் கலகலப்பு படத்தின் மூலம் மாறிய அஞ்சலி சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருந்தார். மலையாளத்தில் இரட்ட உள்ளிட்ட படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய அவர் ராம் இயக்கத்தில் பேரன்பு படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான பறந்து போ படத்திலும் பாவாடை கட்டிக் குளிக்கும் காட்சியில் நடித்து முதல் கிரஷ்ஷாக முத்திரை பதித்திருந்தார்.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து மிரட்டியிருந்தார். ஏழு கடல் ஏழு மலை படம் இந்த ஆண்டு வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான நேரம் இன்னமும் வரவில்லை.
மத கஜ ராஜா வெற்றி: 12 ஆண்டுகளுக்கு முன்னதாக சுந்தர். சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் பிளாக்பஸ்டர் படமாக மாறியது. அதிகபட்சமாக 50 கோடி வரை அந்த படம் வசூல் ஈட்டிய நிலையில், தற்போது மீண்டும் விஷால் படத்தில் அஞ்சலி நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மீண்டும் விஷாலுடன் அஞ்சலி: விஷால் 34 படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியான நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அஞ்சலி தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுதொடர்பான அறிவிப்பை சற்றுமுன் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. மீண்டும் பழையபடி தமிழ் மற்றும் தெலுங்கில் தூள் கிளப்பி வருகிறார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











