»   »  படத்தை இயக்க திராணியோ, பொறுமையோ இல்லை: சல்மான் கான் மச்சினி

படத்தை இயக்க திராணியோ, பொறுமையோ இல்லை: சல்மான் கான் மச்சினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படத்தை இயக்க தனக்கு பொறுமை இல்லை என்று பிரபல குத்தாட்ட நடிகை மலாய்க்கா அரோரா கான் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான், மனீஷா கொய்ராலா நடித்த தில் சே படத்தில் வரும் சைய்ய, சைய்யா என்ற குத்தாட்டப் பாட்டுக்கு நடனம் ஆடி பிரபலம் ஆனவர் மலாய்க்கா அரோரா கான். நடிகர் சல்மானின் கானின் தம்பி அர்பாஸை கானை திருமணம் செய்து கொண்ட மலாய்க்காவுக்கு ஒரு மகன் உள்ளார். 41 வயதானாலும் இன்னும் சிக்கென இருக்கும் அவர் பாலிவுட்டின் முன்னணி குத்தாட்ட நடிகை ஆவார்.

அவர் சல்மான் நடித்த தபாங் படம் மூலம் தயாரிப்பாளர் ஆனார். அவர் தற்போது டாலி கி டோலி என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் தயாரிப்பு மற்றும் இயக்கம் பற்றி மலாய்க்கா கூறுகையில்,

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

தயாரிப்பாளராக இருப்பது வித்தியாசமாக உள்ளது மற்றும் நன்றாகவும் உள்ளது. தயாரிப்பாளர் ஆனதன் மூலம் படங்கள் பற்றி வித்தியாசமான கோணத்தில் புதிதாக கற்றுக் கொள்ள முடிகிறது.

இயக்கம்

இயக்கம்

படத்தை இயக்கும் அளவுக்கு எனக்கு திராணியும், பொறுமையும் இல்லை. என்னால் படத்தை இயக்க முடியாது என்று நினைக்கிறேன்.

சைய்ய, சைய்யா

சைய்ய, சைய்யா

தில் சே படத்தில் வரும் சைய்ய சைய்யா எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆகும். நான் ஆடிய முதல் குத்தாட்ட பாடல் அது. இந்திய ரயில்களில் அந்த பாடல் போன்று வேறு எதையும் படமாக்கியதை பார்த்திருக்க முடியாது என்றார் மலாய்க்கா.

குத்தாட்டம்

குத்தாட்டம்

டாலி கி டோலி படத்தில் பேஷன் கதம் முஜ்பே என்ற பாடலுக்கு மலாய்க்கா நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress and popular item girl Malaika Arora Khan, who is also a film producer, does not want to try her hand at film direction.
Please Wait while comments are loading...